பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஓடிடி உரிமை 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கங்கனாவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “தலைவி' இரு மொழிப் படம். இப்படத்தின் ஹிந்தி, மற்றும் தமிழ் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றிற்கு 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் சாட்டிலைட் உரிமை மற்றும் வெளியீட்டு உரிமை ஆகியவையும் உள்ளன.
ஒவ்வொரு படம் உருவாகும் போதும் நிதித் திட்ட வரைபடம், செலவை மீட்டெடுக்கும் ஒரு வரைபடம் உண்டு. அதற்கேற்றபடி நடிகர்கள், நடிகைகளை நியமிப்பார்கள். ஒரு படத்தில் நடிக்க சம்மதிக்கும் முன் செலவை மீட்டெடுக்கும் வரைபடத்தைப் பொறுத்தே எனது சம்பளம் இருக்கும்,” என்றும் அவருடைய சம்பளத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதனிடையே, 'தலைவி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. அது பற்றி தயாரிப்பாளர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.