கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
பொன்மகள் வந்தாள் படத்தில் குரு, சிஷ்யர்களான பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் மட்டுமின்றி, பிரதாப் போத்தன், தியாகராஜன் என, ஐந்து இயக்குனர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், கதையா; சம்பளமா? என்ற கேள்விக்கு, பாக்யராஜ் கூறுகையில், ''எந்த ஒரு படமாக இருந்தாலும், கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். சம்பளம் எல்லாம் அதை தாண்டி தான். மீண்டும், இதுபோல் ஒரு கதை அமையும் போது, நிச்சயம் நாங்கள் இணைவோம்,'' என்றார்.
ஐந்து இயக்குனர்களையும் நடிக்க வைத்தது குறித்து, இயக்குனர் பெரட்ரிக் கூறுகையில், ''எப்படி படமாக்க வேண்டும் என்பதை, முன்கூட்டியே திட்டமிட்டு விட்டோம். ஐவரும் நண்பர்களாகவும், தொழில் ரீதியாகவும் நிறைய விஷயங்களில் ஒத்துழைப்பு கொடுத்தனர். இது, எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம்,'' என்றார்.