பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி | தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் |
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு சினிமாவில் அதிகரித்த பின் ஏதாவது ஒரு சிறிய படம் வெளியானாலும் உடனடியாக டுவிட்டரில் ஒரே நாளில் 1 கோடி வசூல், 5 கோடி வசூல், 10 கோடி வசூல் என சிலர் அள்ளி விடுவார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் யாரும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். அதிலும் பெரிய நடிகர்கள் படம் என்றால் கேட்கவே வேண்டாம். போதாக் குறைக்கு அந்த பொய்யான வசூல் கணக்கை வைத்து சண்டை வேற நடக்கும்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் வெளியான பின்னும் அந்தப் படம் வெற்றியா, தோல்வியா என்று கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. அதற்குக் காரணம் ஓடிடி ரிலீஸ். ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் கடந்த வாரமே 29ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
தியேட்டர்களில் வெளியாகி இருந்தாலாவது படம் வெற்றியா, தோல்வியா என்று ஏதோ ஒரு தகவலை யாராவது ஒருவர் வெளியிட்டிருப்பார்கள். ஆனால், ஓடிடி தளத்தில் வெளியானதால் இந்தப் படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
படத்தை வெளியிடுவதற்கு முன்பாக அமேசான் நிறுவனம் 2 கோடி பேர் படத்தின் டிரைலரைப் பார்த்தார்கள் என்று பரபரப்பாக விளம்பரப்படுத்தினார்கள். படத்தின் டிரைலரும் யு-டியுபில் 1 கோடியே 36 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. டிரைலரே அவ்வளவு முறை பார்க்கப்பட்டுள்ளது என்றால் படத்தை அதில் பாதி பேர் கூடவா பார்த்திருக்க மாட்டார்கள்.
சரி, 50 லட்சம் பேர் பார்த்திருந்தார்கள் என்றால் கூட அது இந்தப் படத்திற்கு பெரிய வெற்றிதான். ஏற்கெனவே, அமேசான் பிரைம் வைத்திருப்பவர்கள் பார்த்திருந்தால் அவர்களுக்கு போனஸாக இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இதுவரை அமேசான் பிரைம் வைத்திருக்காதவர்கள் ஒரு 10 லட்சம் பேர் புதிதாக சேர்ந்திருந்தால் அது பெரும் வெற்றிதான். ஒரு மாதம் மட்டும் அவர்கள் பணம் கட்டியிருந்தால் மாதத்திற்கு ஒரு கணக்கிற்கு 129 ரூபாய் என்றால் 12 கோடியே 90 லட்சம் வசூலாகி இருக்கும். அதில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் உரிமை விலையான சுமார் 6 கோடி ரூபாய், விளம்பரச் செலவு 1 கோடி ரூபாய் ஆகியவற்றைக் கழித்தால் கூட 5 கோடியே 90 லட்சம் கூடுதல் வருவாய் வந்திருக்கும்.
அதே ஒரு வருடத்திற்கு ஒரு கணக்கிற்கு 999 ரூபாய் பணம் கட்டியிருந்தால் 99 கோடியே 90 லட்சம் அமேசானுக்கு வருவாய் வந்திருக்கும். அதில் பட உரிமை, மற்றும் விளம்பரச் செலவாக 7 கோடி கழித்தால் கூட 92 கோடியே 90 லட்ச ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்.
படத்தைத் தயாரித்த வகையில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் அதிகபட்சமாக 5 கோடி செவழித்திருந்து, ஓடிடி உரிமையாக மட்டும் 6 கோடிக்கு விற்றிருந்தால் அதில் 1 கோடி லாபம் கிடைத்திருக்கும். அடுத்து சாட்டிலைட் உரிமையாக 1 கோடிக்கு விற்றிருந்தால் மேலும் 1 கோடி லாபம் கிடைத்திருக்கும்.
ஆனால், மேலே சொன்னபடி எந்தக் கணக்கும் நடக்காமல் இருந்து புதிதாக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை மட்டுமே தொட்டிருந்தால் அமேசானுக்கு எதிர்பார்த்ததை விட பேரிடிதான் கிடைத்திருக்கும். ஏற்கெனவே, அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே தமிழ்ராக்கர்ஸ் 'பைரசி' பிரின்ட்டை வேறு வெளியிட்டு ஏற்படுத்திய பேரதிர்ச்சியை விட அது பெரிதாக இருந்திருக்கும்.
இந்த கணக்கெல்லாம் ஒரு கணிப்பாக நாம் குறிப்பிடுபவை. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பதை அமேசான் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆனாலும், எதிர்கால வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களும் உண்மையைச் சொல்வார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
'பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தருவாள்' என்று அமேசான் நிறுவனத்தினர் இப்படத்தின்பட வெளியீட்டிற்கு முன் நினைத்திருப்பார்கள். இப்போது 'பொருள் கோடி தந்தாள்' என வெளியீட்டிற்குப் பின் சொல்வார்களா என திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.