'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
தமிழில் மதராசபட்டணம் படம் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு தாண்டவம், தங்கமகன் ஆகிய படங்களில் நடித்தவர், ரஜினியுடன் இணைந்து 2.O படத்தில் நடித்தார். தற்போது குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட எமி ஜாக்சன், ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகவும் மாறிவிட்டார்.
கடந்த சில நாட்களாக நிற பாகுபாடு காரணமாக அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
இதுபற்றி கூறும்போது, “நிற பாகுபாட்டுக்கு எதிராக நேற்று, முதல் கல்லை எடுத்து வைத்துள்ளேன். இது வெறுமனே ஒருமுறை கருத்து சொல்லிவிட்டு பின்னர் அடுத்த பிரச்சனை வந்ததும் இதை மறந்துவிட்டு போவது போன்றதல்ல. நான் எப்போதுமே நிற பாகுபாட்டுக்கு எதிராகவே குரல் கொடுத்து வந்துளேன். எதிர்காலத்தில் எனது குழந்தையையும் நிற பாகுபாட்டுக்கு எதிராகவும் அன்பு, மனிதாபிமானம் ஆகியவற்றுடனும் வளர்ப்பேன். தோலின் நிறத்தை தாண்டி அனைவரையும் சமமாக மதிக்க அவர்களை பழக்குவேன்.. எதிர்கால தலைமுறைக்கு நாம் தானே பொறுப்பு” என்று தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் எமி ஜாக்சன். .