Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாமணிக்கு பிறந்தநாள் பரிசு

04 ஜூன், 2020 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Gift-to-Priyamani

தமிழ் சினிமாவில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகைகள் ஒரு சிலர் தான். லட்சுமி, ஷோபா, சுஹாசினி, அர்ச்சனா, பிரியாமணி ஆகியோர் தான் 66 ஆண்டு தேசிய விருதுகளில் தமிழ்ப் படங்களுக்காக சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்கள்.

2006ம் ஆண்டு வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தற்போது அவர் தெலுங்கில் 'விராத பர்வம்' மற்றும் 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நரப்பா' உள்ளிட்ட சில தெலுங்குப்படங்களிலும், கன்னடம், மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இன்று பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'விராத பர்வம், நரப்பா' ஆகிய படங்களில் அவரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள்.

'விராத பர்வம்' படத்தில் அவர் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். 'நரப்பா' படத்தில் தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பட போஸ்டர்களையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டுவதோடு, பிரியாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யாரைச் சொல்கிறார் குஷ்பு ?யாரைச் சொல்கிறார் குஷ்பு ? தியேட்டர்களைத் திறக்கத் தயக்கம் தியேட்டர்களைத் திறக்கத் தயக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 ஜூன், 2020 - 05:02 Report Abuse
J.V. Iyer பிரியாமணி, நல்ல அழகு, நல்ல நடிகை. தமிழ் வாய்ப்பு வரவில்லை. பாவம். எனினும், பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in