Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்டண கொள்ளை விமர்சனம் - மின்சார வாரியம் கண்டனம் - பிரசன்னா மன்னிப்பு

04 ஜூன், 2020 - 13:05 IST
எழுத்தின் அளவு:
TNEB-reply-to-actor-Prasanna

நடிகர் பிரசன்னாவுக்கு கொரோன ஊரடங்குகால மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. கடந்த காலங்களை விட இது பல மடங்கு உயர்வு என்பதால் கொதித்துப்போனார் பிரசன்னா. "என் வீட்டு மின்கட்டணம் 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. என்னால் இதை கட்ட முடியும். மின்சார வாரியத்தின் குளறுபடியால் இப்படி அதிகமான கட்டணம் வந்தால் சாதாரண மக்களால் எப்படி கட்ட முடியும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு நேரத்தில் கொள்ள அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் பிரசன்னா ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது.

இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பிரசன்னா மன்னிப்பு
நடிகர் பிரசன்னா, டுவிட்டரில் நேற்று கூறியதாவது: மின் மீட்டர் ரீடிங் எடுப்பதிலிருந்து, 10 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான், மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால், கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான். வாரியம் சொல்வது போல், நான்கு மாதம் கணக்கிட்டாலும், மார்ச் மாத கட்டணமும் சேர்த்து, எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்னையாக, இதை நான் எழுப்பவில்லை. இதை போல், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியவே, என், டுவிட்டர் பதிவு அமைந்தது.

மின் வாரியத்தையோ, அரசையோ குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் செலுத்த தவணையோ அல்லது தளர்வோ தந்தால், உதவியாக இருக்கும் என்பதே, என் வேண்டுகோள். என் வார்த்தை மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மனம் நோகச் செய்திருந்தால் வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும், இந்த எதிர்பாரா சுமையை வாரியமும், அரசும் இறக்கி வைக்கும் என, எதிர்பார்க்கிறேன். எனக்கான கட்டணத்தை, முழுதும் செலுத்தி விட்டேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
பாடும் வானம்பாடி எஸ்.பி.பி.க்கு இன்று பிறந்த நாள்: முதல் பாடலுக்கு 3 வருடம், ஒரே நாளில் 21 பாடல்பாடும் வானம்பாடி எஸ்.பி.பி.க்கு இன்று ... சிறு பட்ஜெட் படங்களுக்கு மானியம்: அமைச்சரிடம் கில்டு கோரிக்கை சிறு பட்ஜெட் படங்களுக்கு மானியம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஜூன், 2020 - 14:20 Report Abuse
Kamal அரசாங்கம் மாசம் மாசம் சம்பளம் கொடுக்குது. மின்சார தொழிலாளர்கள் ஒழுங்கா மாச மாசம் பில்லை கணக்கிட்டு மக்களுக்கு மாச மாசம் பில் போடுவது உங்கள் கடமை. மக்களுக்கு கஷ்டம் கொடுப்பது உங்கள் தவறு. ஒழுங்கா உங்க வேலையா செய்தால் ஏன் இப்படி கெட்ட பெயர். நானும் இந்த கஷ்டத்தில் தவறான பில் உடன் இருக்கிறேன். திருந்துங்கள் மின்சார ஊழியர்கள்
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
07 ஜூன், 2020 - 09:26 Report Abuse
Bala Murugan கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாங்கள் மின் கட்டணத்தை online இல் கட்டிவிட்டோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நேரில் சென்று காட்டினேன். இதற்கு முன்னாள் வந்த யூனிட்களுக்கு எவ்வளவு விலையோ அதை வைத்து இப்போது வந்த அளவுக்கு பார்க்கும்போது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மின்சாரமும் கொள்ளையடிக்கப்படுகிறது மின்சார விநியோகத்தால் உபயோகித்த மின்சாரத்தால் அதற்குரிய செலவும் கொள்ளையடிக்கப்படுகிறது. கேட்டால் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள் என்று ஒரு பொது காரணத்தை வைத்துள்ளார்கள். எல்லாவற்றிற்கும் ஊரடங்கை காரணம் காட்டி விட்டு புதுசு புதுசா உக்கார்ந்து யோசிக்கிறாங்க.
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
07 ஜூன், 2020 - 07:33 Report Abuse
CHINTHATHIRAI all the consumers please check their date of effective electricity service connection.Meter caution deposit, Meter Security Deposit and Current Consumption Deposit with applicable interest every financial year. I had temporarily disconnected my electricity service Connection, that too after paying all the requisite fees. But my deposit money of Rs. 5803/- was stealthily taken by the Assistant Engineer. As per Indian Electricity Rules 1956, Annexure-VI section 14, deposit money over 25 rupees will get interest every year . The Electricity Board won't have right to disconnect electricity supply if we have deposit with them in any kind. Some TANGEDCO officials are not aware of CURRENT CONSUMPTION DEPOSIT AND CAUTION DEPOSIT. PUBLIC MONEY WAS SWALLOWED through Information Technology wing of TANGEDCO. After notificationthe respective ministers had not taken steps in time. We all need electricity power supply at a reasonable rate. No need for free electricity service. In order to save the Poor Sector only Our Present central government had introduced amed Electricity Act, 2003. We are all Indians. We have believe in Good Administration.
Rate this:
Natarajan Mahalingam - CHENNAI,இந்தியா
06 ஜூன், 2020 - 09:54 Report Abuse
Natarajan Mahalingam இன்று காலை மின்சார வாரிய அலுவலகம் சென்று வந்தேன். நான்கு மாத மொத்த பயன்பாட்டை 1130 unit, இரண்டாக பிரித்து 565 வீதம் இரண்டு பில்களாக மாற்றி கொள்கிறார்கள். கடைசி பில்லில் unit kazipathu இல்லை. கட்டிய பணத்தை முன்பணம் ஆக கருதுவதால், நமக்கு நட்டமே. அதிகமாக தொகை கொட்ட வேண்டி உள்ளது. 1500 அதிகம் உள்ளது. Current Bill 4981. March amount 920 for 440 unit. இது கொள்ளை இல்லாமல் என்ன?
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
06 ஜூன், 2020 - 06:10 Report Abuse
Allah Daniel என்ன இருந்தாலும் வெறும் Rs 5 கு ஓபன்ஹார்ட் வைத்தியம் பார்த்த நம்ம ‘மெர்சல்’ டாக்டர் போல வருமா...
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in