Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா

03 ஜூன், 2020 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-to-act-in-Prabhudeva-direction

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்து வந்த படம் கருப்புராஜா வெள்ளைராஜா. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார். இருவரும் சில ஆண்டுகள் காதலித்தனர். திருமணம் வரை சென்ற அவர்களது காதல் திடீரென இடையில் முறிந்தது. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன் காதலித்து வருகிறார்.

சொந்த வாழ்க்கை வேறு தொழில் வேறு என்பதில் எப்போதுமே நயன் ரொம்பத் தெளிவு. ஏற்கனவே தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் அவர் சேர்ந்து நடித்திருந்தார். எனவே மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கும் டாப்சிகர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கும் ... பிரித்விராஜிற்கு கொரோனா தொற்று இல்லை பிரித்விராஜிற்கு கொரோனா தொற்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

அன்பு - தஞ்சை,இந்தியா
04 ஜூன், 2020 - 23:11 Report Abuse
அன்பு விக்னேஷ் சிவன் வயிற்றில் புளியை கரைக்காதீங்க அவர் பாவம் புருஷ வேலை மட்டும் தான் பாத்துக்கிட்டு இருக்கார்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
04 ஜூன், 2020 - 18:38 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அப்போ இனிமே விக்னேஷ் சிவன்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in