ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
'துருவங்கள் 16, மாபியா' படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. கொரானோ ஊரடங்கு முடிந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறேன் எனச் சொல்லி ஒரு நபர் வாட்சப் மூலம் வசூல் வேட்டை நடத்துவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“எனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக கூறிக் கொண்டு ஒரு நபர் வாட்சப் மூலம் பணம் கேட்டு வருவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. உங்களுக்கு ஏதாவது மெசேஜ் வந்தால், அந்த தொலைபேசி எண்ணை தயவு செய்து பிளாக் செய்து புகார் தெரிவியுங்கள். இதை செய்பவர் ஒரு 'பிராட்', அவரை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும்,” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.