175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்காரவேலன், 50 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1970ம் ஆண்டு வெளிவந்த படங்களிலேயே சூப்பர் ஹிட் படமாக அமைந்து, மிகப்பெரிய வசூலை கொடுத்தது. சென்னையில் மட்டும் ஒரே தியேட்டரில் தொடர்ந்து 400 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தில்தான் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டம் டைட்டிலில் பயன்படுத்தப்பட்டது.
1966ம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்து அங்கு பெரிய வெற்றி பெற்ற படமான எம்மா தம்மன்னா என்ற படத்தின் ரீமேக்தான் மாட்டுக்கார வேலன். கோபுலா கோபன்னா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனது. அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்தார். இந்தியில் ஜிகிரி தோஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகி ஜிஜேந்திரா நடித்தார். இந்தப் படம் வெளிவந்து ஒரு ரவுண்டு ஓடிய பிறகு சினிமாஸ்கோப்புக்கு மாற்றப்பட்டு அடுத்த ரவுண்டாக ஓடியது. சமீபத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி 3வது ரவுண்டும் ஓடியது.
எம்.ஜி.ஆர் வழக்கறிஞர், மாடு வளர்க்கிறவர் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் லட்சுமி, ஜெயலலிதா, அசோகன், வி.கே.ராமசாமி, சோ, எஸ்.வரலட்சுமி, சச்சு உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சத்யம் நீயே தர்ம தாயே..., ஒரு பக்கம் பார்க்கிறா.., பட்டிக்காடா பட்டணமா, ஊர் பாடும் தாலாட்டு என தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கி இருந்தார்.