நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள், ஜிம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் கடந்த 70 நாட்களாக மூடப்பட்டுள்ளன. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்களையும் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், பார்வையாளர்கள் இல்லாமல் தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
70 நாட்களாக பூட்டிக்கிடந்த தியேட்டர்களை புரணமைக்க இது வசதியாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கும் என தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.