'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். ஆனால் எல்லாரிடமும் இருந்து தனித்து தன் இசையால் ராஜா என நிரூபித்தவர் இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு மேலாக இசையில் ராஜ்ஜியம் படைத்து வரும் இவருக்கு இன்று பிறந்தநாள். உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
ஏற்கனவே தன் பெயரில் தனியாக யு-டியூப் சேனல் நடத்தி வரும் இளையராஜா, அடுத்ததாக ஓடிடி தளம் ஒன்றை துவங்க உள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இசை ஓடிடி என்ற பெயரில் துவங்கும் இந்த தளத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற துடி, துடித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே. உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கொரோனா தடுத்து விட்டது. இருந்தாலும் உங்களின் அன்பு உள்ளங்களை நான் அறிவேன். உங்களுடன் இசை வடிவில் தினமும் வாழ்கிறேன். எப்போதும் எனது இசை உங்களுடன் வந்து கொண்டிருக்கும். வெறும் இசை மட்டும் வந்தால் போதும், நான் வரவேண்டாமா, அதனால் உங்கள் வீடுகளில் இசை ஓடிடி மூலம் நானே நேரடியாக வருகிறேன். என் பிறந்தநாளில் இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
இதில் தன் இசை தொடர்பான பல்வேறு பயணங்களை பதிவிட உள்ளேன். ஒரு பாடல் உருவான விதம், அதில் நடந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பல சுவாரஸ்ய விஷயங்களையும் இதில் பதிவிட உள்ளேன். வேறு எந்த சேனல்களிலும் சேராத பல தகவல்களை இந்த சேனலில் பார்க்க முடியும். புகழ்பெற்ற இசைகலைஞர்களும் இதில் பங்கேற்று, பல சுவாரஸ்யங்களை பதிவிட உள்ளனர். விரைவில் வருகிறது இசை ஓடிடி, அந்த நாளுக்காக காத்திருங்கள் என்றார்.