துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழ் சினிமாவில் சில ஹீரோக்கள் மீது சில ஹீரோயின்களுக்கு ஒரு 'க்ரஷ்' இருக்கும். சிறு வயதிலிருந்தே பார்த்து ரசித்த ஹீரோக்கள் மீது அது இன்னும் அதிகமாக இருக்கும். அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஹீரோயின்கள் கூட சாதாரண ரசிகைகளைப் போல் ஆகிவிடுவார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் பலரின் மனம் கவர்ந்த ஹீரோவாக இன்றும் இருப்பவர் நடிகர் மாதவன். அவர் நாயகனாக அறிமுகமான 'அலைபாயுதே' படம் வெளிவந்து 20 வருடங்களாகிவிட்டது. இன்னும் மாதவன் 'கிரேஸ்' தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் குறையவில்லை.
மாதவன் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், குறிப்பாக பல நடிகைகள் மறக்காமல் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர்களில் வளரும் நடிகையான அதுல்யா ரவியும் ஒருவர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாதவன் இன்று நன்றி தெரிவித்து வருகிறார். அதில் அதுல்யா ரவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மாதவனிடமிருந்த நன்றி வந்ததையடுத்து 'இன்று அதிகமான மகிழ்ச்சியான நாள்' என அதுல்யா டுவீட் செய்துள்ளார்.
'அலைபாயுதே' வந்த போது அதுல்யா ஐந்து வயது குட்டிப் பெண்ணாக இருந்திருப்பார்.