Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவின் செல்வன் மணிரத்னத்திற்கு இன்று பிறந்தநாள்

02 ஜூன், 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Maniratnam

தமிழ் சினிமாவை இந்திய சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்ததில் முக்கியமான இயக்குனர் மணிரத்னம். சினிமா என்பது காட்சி ஊடகம்தான். ஆனால், அது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிக வசனங்களுடன் கூடிய ஒரு நாடகமாக்கம் போல்தான் நீண்ட காலமாக இருந்தது. அதைத் தனது படங்களின் மூலம் உடைத்தெறிந்தவர் மணிரத்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒளிப்பதிவு, லைட்டிங், பாடல்களின் படமாக்கம் என சினிமாவை காட்சி ஊடகமாக ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். தமிழில் அவருடைய முதல் படம் அவரின் மூன்றாவது படம்தான் என்பது சிலருக்குத் தெரிந்திருக்காது. தமிழில் அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களான பகல் நிலவு, இதயக் கோயில் இரண்டுமே சுமாரான படங்களாகவே அமைந்தன. ஆனால், மௌன ராகம் படத்தின் மூலம் தனது சினிமா ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை அந்த ஆளுமை அவர் இயக்கும் படங்களில் தொடர்கிறது.

“நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி” என அவருடைய சில படங்கள் இன்றும் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் மறக்க முடியாத படங்கள்.




தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் அவரது ஓரிரு படங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர்.

அவரது இயக்கத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாகப் போகிறது என்ற அறிவிப்பு வந்ததும் பொன்னியின் செல்வன் ரசிகர்களும், மணிரத்னம் ரசிகர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

ஆனால், இந்த கொரானோ காலத்தில் பொன்னியின் செல்வன் படம் பற்றி சில நெகட்டிவ்வான தகவல்கள் வந்து கொண்டிருப்பது அவர்களுக்குக் கவலை அளிக்கிறது.

இருந்தாலும், மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மாறுபட்ட படைப்பாக தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் என்பதை அவருடைய ரசிகர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னத்திற்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இசையின் ராஜா இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் - குவியும் வாழ்த்துஇசையின் ராஜா இளையராஜாவுக்கு இன்று ... நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பார்களா ? நடிகர்கள் சம்பளத்தைக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
02 ஜூன், 2020 - 17:12 Report Abuse
Selvaraj Chinniah இந்த ஆளின் உண்மையான பெயர் என்ன?
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
02 ஜூன், 2020 - 11:56 Report Abuse
sankaseshan பொன்னியின்செல்வன் படம் வெற்றி பெறாது கல்கியின் வருணனைகளை படமாக்குவது கடினம் படித்துதான் அனுபவிக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in