Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசையின் ராஜா இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் - குவியும் வாழ்த்து

02 ஜூன், 2020 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Evergreen-Ilayaraja

1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 44 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் தான் இந்த 43 ஆண்டுகள், ஆனால், இப்படிப்பட்ட இசை மேதைகள் பிறந்ததிலிருந்தே மேதைகள் என அவருடன் பயணித்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

76ம் ஆண்டில் தன் பெயரிலான அதிகாரப்பூர்வ இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 77வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம்.

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.

இன்று உலகமே கொரோனாவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடந்த இரண்டு மாத காலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் மக்களை தாலாட்ட வைத்திருக்கும். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். --குறிப்பாக சமூகவலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் இளையராஜா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கும் அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://cinema.dinamalar.com/ilayaraja/

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும், 'டிரெண்ட்' ஆன வாழைப்பழ காமெடிமீண்டும், 'டிரெண்ட்' ஆன வாழைப்பழ ... தமிழ் சினிமாவின் செல்வன் மணிரத்னத்திற்கு இன்று பிறந்தநாள் தமிழ் சினிமாவின் செல்வன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

K.P SARATHI - chennai,இந்தியா
02 ஜூன், 2020 - 17:25 Report Abuse
K.P SARATHI இவரது இசை உலகின் எட்டாவது அதிசயம், கற்பனை திறன் கொண்ட கற்பக விருச்சம் இவர் வாழ்க
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
02 ஜூன், 2020 - 17:05 Report Abuse
g.s,rajan It is a great pleasure to listen Ilaiyaraja sir சொங்ஸ் " n" number of times which is definitely an invaluable gift to all of his vigorous fans.It is always memorable and unforget moments in every ones life. g.s.rajan, Chennai.
Rate this:
பாஸ்கர் - Chennai,இந்தியா
02 ஜூன், 2020 - 16:49 Report Abuse
பாஸ்கர் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. என் இறைவனே, நீ நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
Rate this:
T. Sridharan - chennai,இந்தியா
02 ஜூன், 2020 - 16:27 Report Abuse
 T. Sridharan இசை அலைஸ் இளையராஜா தி கிரேட் , ஹாப்பி பர்த்டே டு யு சார்.
Rate this:
Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்
02 ஜூன், 2020 - 16:18 Report Abuse
Govind Srinivasan இசை கடவுளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in