Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவேன் : மணிரத்னம் உறுதி

01 ஜூன், 2020 - 17:36 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-sure-about-Ponniyin-selvan-shooting

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன் ஆகியோர் முயற்சித்தும் முடியாத கல்கியின் பொன்னியின் செல்வனை முடித்துக் காட்டுகிறேன் என்று களம் இறங்கினார் மணிரத்னம். 2 ஆண்டாக உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதினார். விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், அதிதிராவ், த்ரிஷா என நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்தார். நடிகர்களை நீண்ட முடிவளர்க்க வைத்து, நடிகைகளை வாள்சண்டை, கத்தி சண்டை கற்க வைத்தார்.

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து 600 கோடிக்கு பட்ஜெட் போட்டு 2 பாகமாக எடுக்க முடிவு செய்தார். தாய்லாந்திலும், ஐதராபாத்திலுமாக 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் வந்தது கொரோன பிரச்சினை. படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே பொன்னியின் செல்வனுக்காக நீண்ட தலைமுடி வளர்த்துள்ள நடிகர்கள் அடுத்த படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு ஒரு வேளை விலக்கி கொள்ளப்பட்டாலும் இன்னும் 6 மாதத்திற்காவது சமூக விலகல் இருக்கும். அதனால் பல ஆயிரம் பேர் பணியாற்றி வந்த பொன்னியின் செல்வனை தொடர்வது இனி சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்படுமா என்கிற சூழ்நிலையில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க லைக்கா நிறுவனம் தயங்குவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவேன் என்று கூறியிருக்கிறார் மணிரத்னம். ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்பு என்கிற தலைப்பில் பிலிம் சேம்பர் நடத்திய இணையத்தள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மணிரத்னம் இதனை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா ஊடரங்கால் பொன்னியின் செல்வன் தடைபட்டிருப்பது உண்மைதான். பிரமாண்ட போர் காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப்பட இருக்கிறது. நிறைய மக்கள் கூட்டத்துடன் தான் இந்த காட்சிகளை படமாக்க முடியும். இந்த காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதனை எப்படியோ செய்து முடிப்பேன். நான் ஒரு தொழில்முறை கலைஞன், அதற்கான சம்பளத்தை நான் வாங்குகிறேன். அதனால் அதை படமாக்கி காட்டுவேன். அது எப்படி படமாக்கி முடித்தேன் என்பதை படப்பிடிப்பை முடித்து விட்டுச் சொல்கிறேன் என்கிறார் மணிரத்னம்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி ?அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ... இதுவும் தீவிரவாதம் தான்: லட்சுமி ராமகிருஷ்ணன் செம காட்டம் இதுவும் தீவிரவாதம் தான்: லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02 ஜூன், 2020 - 20:37 Report Abuse
Natarajan Ramanathan சிலுவைதான்.....
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
02 ஜூன், 2020 - 17:19 Report Abuse
Tamilnesan இவருக்கு வேண்டும் என்றால் இந்து மத கதை வேண்டும்.. பெரும்பாலான நேரத்தில் இந்து மதத்தை குறை கூறும் இவருக்கு, இந்து மத கதையான பொன்னியின் செல்வம் கதை மட்டும் வேண்டுமா? கேடு கேட்ட சினிமா இயக்குனர்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02 ஜூன், 2020 - 13:38 Report Abuse
Natarajan Ramanathan P Karthikeyan - Chennai, comment is CORRECT.
Rate this:
Madhu - Trichy,இந்தியா
02 ஜூன், 2020 - 10:56 Report Abuse
 Madhu "பொன்னியின் செல்வன்" நாவல் வாசகர்கள் மனதில் நிற்கக் காரணமாக இருந்தது 'கல்கி'யின் கதை சொல்லும் பாங்கு எழுத்து நடை இவைகளுடன், ஓவியர்கள் மணியன், வினு அதன் பின்னர் வந்த மணியன் செல்வன் போன்றோர் வரைந்த, எழுதிக் காட்டிய ஓவியங்களும் முக்கிய காரணங்களாகும். வாசகர்கள் மனதில் வந்தியத் தேவன், குந்தவை, பூங்குழலி, சேந்தன் அமுதன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர்கள் போன்றோர்களின் உருவங்கள் கதையைப் படிக்கும்போதே பதிவாகி விட்டபடியால், தற்போது திரைப்படமாக எடுக்கப் படும்போது கதாபாத்திரங்களின் ஒப்பனை வடிவம் மேற்கூறிய ஓவியர்கள் எழுதிக் காட்டிய விதத்தில் அமையுமானால், படம் பாதி வெற்றி பெறுவது உறுதி. இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இதிலும் கவனம் வைப்பார் என நம்புவோமாக
Rate this:
Arumuga Pradeesh Kumar - Doha,இந்தியா
02 ஜூன், 2020 - 10:28 Report Abuse
Arumuga Pradeesh Kumar in Ponniyin selvan Novel, there is no war scene at all... also there is fight scene for any of the woman character ..i dont know how much this man is going to deviate from the novel ..
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in