Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி ?

01 ஜூன், 2020 - 16:40 IST
எழுத்தின் அளவு:
News-spreading-that-Suriya---Karthi-to-be-actin-Ayyapanum-Koshiyamum

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பிரித்விராஜ், பிஜுமேனன் நடித்த இந்தப்படத்தின் இதன் மற்ற மொழி ரீமேக் உரிமைகளை இந்த ஊரடங்கு சமயத்திலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என ஆளாளுக்கு கைப்பற்றி விட்டார்கள். இதில் தமிழுக்கான ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.

அப்போதிருந்தே இந்தப்படத்தில் சரத்குமார் - சசிகுமார் இருவரும் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. அதன் பின் சசிகுமார் - ஆர்யா என அந்த காம்பினேஷன் மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்தால் கதையின் ஜீவன் கெட்டுவிடும் என நெட்டிசன்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால், இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என ஆர்யா கூறியதாகவும் ஒரு செய்தி வெளியானது.

இப்போது அண்ணன் தம்பியான சூர்யாவும் கார்த்தியுமே முதன்முறையாக இந்தப்படத்தில் இணைந்து அய்யப்பனும் கோஷியுமாக மாறப்போகிறார்கள் என்கிற புது தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த யூகங்களுக்கு எல்லாம் ஆடுகளம் கதிரேசன் சீக்கிரமே முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைபடமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் ... பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவேன் : மணிரத்னம் உறுதி பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவேன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Covaxin - Bharat Hindustan,இந்தியா
02 ஜூன், 2020 - 12:03 Report Abuse
Covaxin தமிழ் சினிமாக்காரர்களால் சொந்தமாக ஒரு நல்ல கதை யோசிக்கக்கூடிய திறமை கூட இல்லை. நல்ல கதையம்சம் உள்ள மலையாள திரைப்படங்களை ரீமேக் செய்கிறேன் பேர்வழி என்று அதை கெடுத்து குதறிவிடுகிறார்கள்... ஆனால் இவர்களுக்கு சம்பளம் மட்டும் பல கோடிகளில் இந்த சினிமாவை ஆதரிப்பதால் நமக்கு வீண் செலவும், தலைவலியும் மன உளைச்சலும்தான் பரிசாகக் கிடைக்கும்...
Rate this:
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜூன், 2020 - 00:28 Report Abuse
Susil Kumar ஐயப்பன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இன்னொரு நடிகர் மாதவன்
Rate this:
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜூன், 2020 - 00:20 Report Abuse
Susil Kumar சொல்லப்போனால் , இப்படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்திற்கு சரியான நபர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம் , இங்கு தலைப்பில் உள்ள இருவரையும் நடிக்க வைப்பதற்கு பதிலாக தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொள்ளலாம் , படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும், எனக்கு தெரிந்த வரையில் ஐயப்பன் கதாபாத்திரம் சிரிக்காமல் எப்போதுமே சீரியசாக இருக்கும் ஒன்று ,இதற்கு தமிழில் விஜய் அந்தோணி மட்டுமே சரி ,கோஷி கதாபாத்திரத்திற்கு அருண்விஜய் பொருத்தமாக இருப்பர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in