கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
கொரோனா ஊரடங்கு சினிமா ரசிகர்களுக்கு பல படங்களைப் பார்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத மக்கள் அவரவர்க்குப் பிடித்தமான விதத்தில தங்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
சினிமா ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் இதுவரை பார்க்காத படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் 'டிபி (தீபிகா படுகோனோவின் சுருக்கம்) பரிந்துரைகள்' என சில படங்களை 'இப்போது பாருங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலப் படங்களுடன் சேர்த்து 2018ல் வெளிவந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தைப் பாருங்கள் என பரிந்துரை செய்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா இப்போது தான் தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த படங்களை இந்த ஊரடங்கில் பார்க்கிறார் போலிருக்கிறது.