டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
ருத்ரையா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடிக்க, இளையராஜா இசையமைப்பில், 1978ம் ஆண்டு வெளிவந்த படம் 'அவள் அப்படித்தான்'. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இந்தப் படமும் கருதப்படுகிறது.
32 ஆண்டுகள் கழித்து அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அதர்வா, சமந்தா நடித்த 'பாணா காத்தாடி' படத்தை இயக்கி பத்ரி தற்போது ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ள 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியான 'ஹலோ சகோ' நிகழ்ச்சியை இயக்கும் போது பத்ரி இந்த ரீமேக் பற்றியும் ஸ்ருதியிடம் பேசியிருக்கிறாராம்.
“இந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாக 'அவள் அப்படித்தான்' கதை இருக்கும். அதன் ஜீவன் கெடாமல் இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு ஆகியோர் எனது தேர்வாக உள்ளார்கள். மீண்டும் இளையராஜா சாரை படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்கவும் உள்ளோம். படத்தின் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் உள்ளோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த ஆண்டில் படம் வெளிவரும்,” எனக் கூறியுள்ளார் பத்ரி வெங்கடேஷ்.