கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா என பல வெற்றி படங்களை தந்தவர்.
முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இதற்காக அவர் விரதமிருந்து வருகிறார். இந்த படத்தை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.
முத்துராமலிங்கத் தேவரின் சிறுவயது தோழரான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய, "முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படுகிறது. முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.