Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார்

01 ஜூன், 2020 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-complaint-against-Singamuthu-and-Manobala

தன்னை பற்றி அவதூறு பேசிய நடிகர் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது நடவடிக்கை கோரி நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் வடிவேலு. ஆனால் பல பிரச்னைகளால் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியே உள்ளார். இன்றைக்கு புதுமுகங்கள் பலரும் காமெடி செய்து வந்தாலும் அவர்களால் வடிவேலு இடத்தை பிடிக்க முடியவில்லை. வடிவேலுவின் காமெடி குழுவில் முக்கிய நபராக இருந்தார் நடிகர் சிங்கமுத்து. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் நிலப்பிரச்னை தொடர்பாக இவர்கள் இருவரும் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

நடிகர் மனோபாலா தனது யு-டியூப் சேனலில் சிங்கமுத்துவை பேட்டி கண்டார். இதில் வடிவேலு பற்றிய சிங்கமுத்து அவதூறு பேசியதாக தெரிகிறது. இதனால் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சங்கம் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

அதில் வடிவேலு கூறியிருப்பதாவது : நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூ-டியூப் சேனலில் என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் மனோபாலா கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ரகுல் மகிழ்ச்சிரகுல் மகிழ்ச்சி திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும் பசும்பொன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூன், 2020 - 08:49 Report Abuse
skv srinivasankrishnaveni என்னய்யா இது கொடுமை காமெடி சிரிப்பா சிரிக்குதே கண்ராவி இன்று மக்களுக்கு இருக்கும் பல கஷ்டங்களிலே காமெடியை ரசிக்கும் மனநிலையே இல்லீங்க அதுதான் 100% உண்மை அடித்தட்டு மக்கள் ஒத்துழைக்காமல் இஷ்டத்துக்கு கூட்டமா கும்பலா சுத்தி நிண்டே இருக்காங்க அதான் சென்னைலே இவ்ளோ கேஸுங்க அண்ட் மரணம்களும்
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
02 ஜூன், 2020 - 08:20 Report Abuse
M.Sam இந்த இரண்டு பெயரும் மகா குசுபங்கள் வடிவேலுவின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவருக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள்
Rate this:
kadavul - Chennai,இந்தியா
02 ஜூன், 2020 - 07:38 Report Abuse
kadavul இதெல்லாம் சகஜம் . சிங்கம் படுத்தா இதுங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் . விடுங்க கைப்புள்ள .....
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
01 ஜூன், 2020 - 19:55 Report Abuse
Bala Murugan சிங்கமுத்துவுக்கும் மனோபாலாவுக்கும் வடிவேலுவை ஓரண்டை இழுக்காமல் தூங்க முடியாதா ? ஒரு நிகழ்ச்சி நடத்தினால் யார் மனதையும் நோகடிக்காமல் கலங்கடிக்காமல் நடத்த வேண்டும் என்று ஒரு விதி இருப்பது தெரியாதா? இவுங்களாம் இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துவதை தடை செய்ய வேண்டும் அல்லது யாரையும் குறிப்பிடாமல் நல்ல நிகழ்ச்சி வழங்க வேண்டும்.
Rate this:
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
01 ஜூன், 2020 - 18:00 Report Abuse
GURU THENI வடிவேலுக்கு ரைடு பயம் வந்திருச்சு உண்மையை சிங்கமுத்து சொல்லிவிட்டார் என்று எல்லாத்தையும் கணக்கில் கட்டியாச்சா வைகைப்புயல்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in