Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்

31 மே, 2020 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Sooraraipottu---Suriyas-plan

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. விமான சேவையை வெகுஜன மக்களும் பயன்படுத்த வகை செய்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. என்.ஜிகே. படம் தோல்வியடைந்ததால், சூர்யாவும், அவரது ரசிகர்களும் இந்த படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படம் தொடர்பாக ஆன்லைன் செயலி மூலம் ரசிகர்களுடன் சூர்யா உரையாற்றினார். அப்போது ரசிகர் ஒருவர் சூரரைப் போற்று ரிலீஸ் எப்போது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூர்யா, "சூரரைப் போற்று திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் விரைவில் ரிலீசாகும். படம் மிக அருமையாக வந்துள்ளது.

தியேட்டர் ரிலீஸ் போல் வேறு எதுவும் அமையாது. சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆசையாக காத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் நிச்சயம் ரிலீசாகும்", என்றார்.

பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஒடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு திரையரங்குகளை தர மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சூரரைப் போற்று படத்திற்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகாஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ... கடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர் கடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
05 ஜூன், 2020 - 18:34 Report Abuse
வாய்மையே வெல்லும் கேவலமாய் பேசினா வாய் வெத்தலை போடவைப்போம் ..இனிமே நீ கீழ விழுந்து எந்திரிக்கவே முடியாதபடி செய்வோம்..
Rate this:
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
01 ஜூன், 2020 - 22:13 Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi OTT ya theater Ra illa Tamil Rockers sa
Rate this:
s.palanisamy - TIRUPUR,இந்தியா
01 ஜூன், 2020 - 15:46 Report Abuse
s.palanisamy விலை போகாத (பொன்மகள் வந்தால்)/கத்திரிக்காயவே, ஒரே வார்த்தை பேசி 8 கோடிக்கு வித்துட்டீங்க புருசனும், பொண்டாட்டியும்..... தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி, இந்துக்களையும், இந்துக்கடவுள்களையும் கேவலமாக பேசினாலே போதும்..
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
01 ஜூன், 2020 - 14:06 Report Abuse
Covim-20 சூர்யா படங்கள் எல்லாம் இனி ஊத்திக்கும்... மக்கள் திட்டவட்டம்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
01 ஜூன், 2020 - 10:53 Report Abuse
Bhaskaran விரைவில் தமிழ்ரோகேர்சபுண்ணியத்தில் உலகத்திலிருக்கும் அணைத்து தமிழ்நெஞ்சங்களும் பார்த்து ரசிக்கணும் .குள்ளர்சந்தோஷக்கடலில் mithakanum
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in