Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது

31 மே, 2020 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Godman-webseries-will-not-release

கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பிராமணர்களையும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட, காட்மேன் என்ற, வெப் சீரியல் தொடர் நிறுத்தப்படும் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியிடம், ஜி டிவி நிர்வாகத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை, சுப்பிர மணியசாமி தலைவராக உள்ள, விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் மாநில தலைவர், சந்திரலேகா கூறியதாவது: ஜி டிவியில், காட்மேன் என்ற தொடரை ஒளிபரப்ப இருப்பதாக, விளம்பரம் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துகள் கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து, சுப்பிரமணியசாமியிடம் நான் எடுத்துக் கூறினேன். அவர், ஜி டிவியின் நிர்வாகி, சுபாஷ் சந்திராவிடம் பேசினார். ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும், இந்த தொடரை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார். சுபாஷ் சந்திராவும், இந்த தொடரை ஒளிப்பரப்புவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். ஹிந்து தர்மத்தின் பாதுகாவலனாக சுப்பிரமணிய சாமி திகழ்கிறார்; அவருக்கு என்மனமார்ந்த நன்றி.

இவ்வாறு, சந்திரலேகா கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள்முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் ... 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
04 ஜூன், 2020 - 19:50 Report Abuse
Bhaskaran இந்த தொடருக்கு பல்கோடிநிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் உலவுகிறது
Rate this:
Ramona - london,யுனைடெட் கிங்டம்
02 ஜூன், 2020 - 13:02 Report Abuse
Ramona நிறுத்தம் என்று சொல்லிவிட்டு பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் இந்த படத்தை முழுமையாக ஒழித்து கட்ட என்ன வழி என்று தேட வேண்டும், இல்லை வாய்தா வாங்கி நீதிமன்ற பின் புறமாக நுழைந்து புது கோரிக்கை வைக்க ,அத ஏற்றுக் கொள்ளட்டும்.
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
01 ஜூன், 2020 - 08:56 Report Abuse
K.ANBARASAN சுப்பிரமணிய ஸ்வாமி என்றால் எல்லாருக்கும் பேதி தான் .வழக்கு போட்டால் அப்புறம் தப்பவே முடியாது
Rate this:
vns - Delhi,இந்தியா
31 மே, 2020 - 16:39 Report Abuse
vns All my best wishes to Shri Subramaniam Swamy. No Hindu wants to even acknowledge this man's efforts? Such a shame.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in