Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு

31 மே, 2020 - 11:19 IST
எழுத்தின் அளவு:
TN-Theatre-owners-ready-to-reduce-the-ticket-rate

அரசு வரியை குறைத்தால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க தயார் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்று வரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

50ஆயிரம் பேருக்கு வாழ்வு தருகிறது

நோய் தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்தியேட்டர்கள், மால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்த விதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த இந்த தொழில் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.
தியேட்டர்கள் மூடப்பட்ட பின் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று தியேட்டர் தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

டிக்கெட் விலையை குறைக்க தயார்
இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களில் திரைப்படங்களை கண்டுகளிப்பது. சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பன செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்ககூடிய தியேட்டர் தொழிலை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8 சதவிகிதத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதனை ரத்து செய்வதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனி திரையரங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட் விலை 84 ரூபாய்க்கு விற்க முடியும்.

சலுகை வேண்டும்

ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக சதவிகித பார்வையாளர்கள் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20 சதவிகித பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10 சதவிகித பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

தற்பொழுது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடியுள்ள நிலையில் தியேட்டருக்கான மின் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை தர வேண்டுகிறோம். முழு முடக்க காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும் வரை சொத்து வரியில் 50 சதவிகித சலுகை தர வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டுக்கும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன் : சந்தோஷ் சிவன்இரண்டுக்கும் வித்தியாசம் ... ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ஜெனிலியா ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூன், 2020 - 16:17 Report Abuse
skv srinivasankrishnaveni சினிமாவாலேதான் கொரோனா பரவுதம்மா கேலியா இருக்கே மக்கள் வெறிபிடிச்சாப்போல லோலோன்னு காத்திடு தெருவிலே சுத்துறாங்களே அரசு சட்டம்போடலாம் படிஞ்சுநடக்குறாங்களா ஏவாளும் காணாத கண்டமாதிரி இல்லே சுத்துறாளுக ஒழுக்கம்வேண்டாமா இதுலே வருமானமே இல்லேன்னு டாஸ்மாக் திறந்தபிஹு தினம் பலகோடிகள் அரசுக்கு வருமானம் கொட்டுதாம் இல்லே முக எண்ணிக்குப்பஞ்சம் பிழைக்க குடியைகொண்டாந்து ஏழைகளைவயத்துலே அடிச்சானோ அன்னிக்கே தமிழ்நாடு செத்துப்போச்சுய்யா அசிங்கமாயிருக்குங்க தமிழன் நிலைமை காண
Rate this:
Saravanan R R - Chennai,இந்தியா
01 ஜூன், 2020 - 14:10 Report Abuse
Saravanan R R தியேட்டர் ல படம் பார்க்கறதுக்கு டிக்கெட் செலவை விட அங்கே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை தான் மூச்சை முட்டும் அளவு இருக்கிறது...இதுல வெளியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. தியேட்டர் நடத்துற புண்ணியவான்கள் டிக்கெட் விலையை ஒன்றும் குறைக்கவேண்டாம்.. 10 ரூபாய் பாப்கார்ன் 200 ரூபாய்க்கு விக்கறீங்க.... இதுபோன்ற கொள்ளையை நிறுத்தினாலே கோடி புண்ணியம் சாமி.
Rate this:
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜூன், 2020 - 11:54 Report Abuse
Shanan ஆனால் தியேட்டர்களில் விற்கும் பாப்கார்ன் மற்றும் இதர நொறுக்குத்தீனிகள் விலை எகிறும்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
01 ஜூன், 2020 - 10:36 Report Abuse
தமிழ்வேள் நடிகருக்கு அள்ளிக்கொடுப்பானேன் அப்புறம் அழுது புரள்வானேன் ? அதிக விலை கொடுத்து டிக்கெட் பார்க்கிங் கான்டீன் தின்பண்டங்கள் ஏன் வாங்கவேண்டும் ? குடிநீர்கூட கொண்டுவரக்கூடாது என்ற அடாவடி ....ஆனால் பத்துரூபாய் தண்ணீர் பாட்டில் ஐம்பது ரூபாய் விலை மனசாட்ச்சி அற்ற கொள்ளைக்காரர்களான உங்களுக்கு இந்த் திரைப்பட தொழில் அழிந்து போவது ஒன்றே சரியான தண்டனை .சமூகத்தை கெடுக்கும் தொழிலுக்கு தண்டனை வேண்டாமா ?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 ஜூன், 2020 - 10:29 Report Abuse
skv srinivasankrishnaveni இவ்லோவிலை ஏறியதும் எவண் காரணம் கொடியே ஹீரோ ஹீரோயின்களுக்குமட்டும் வாரிவழங்கிதான் இல்லியா சமீபத்ததுலே ஒரு சாநல்லே பழைய மூவி பாத்தேன் ஹீரோயின் அழகா சாறி உடுத்திண்டுதான் நடிச்சாக கேவலாமாயில்லீங்க ஆணாமூஞ்சி விகாரமா தேசலா இருந்தாலும் அழகே இல்லேன்னாலும் மாராப்பே இல்லாதிக்கு நடிச்சா அவளுக்கு அவ்ளோ மார்க்கெட்டு கொடியே துட்டுத்தறானுக காலனுக்காபொலவரும் தயாரிப்பாளனுக்காபஞ்சம் ஹிந்திலே எப்போதும் அம்மணம் தமிழ்நாட்டுல யம் இதுவந்தாச்சு கண்ராவிசிலுக்குவந்தா ஹெலன் வந்தா ஆlaம் வந்தா சோதிலக்ஷ்மி அவதங்கச்சி லொட்டுலொசுக்கெல்லாம் வந்துபோயாச்சு இப்போதெல்லாம் கதானாயகியே ரேடியஇருக்கா லூக்கா அம+மனமா நடிக்க ஒருமுறை நடிகைக்காக்கும் தன்மானம் உண்டு என்று ஒருகவிஞர் கூறிட்டு அவர்பட்டபாடு உலகறியும் எவனுக்கும் ஒழுக்கமேயில்லாதவுலகம் சினிஉலகம் என்று சொல்லிட்டு ஒருபெரிய மனுஷன் பட்டபாடும் தெரியும் பாதிக்கப்பட்ட நடிகையே அவனைகிழிச்சு தோரணம் ஆக்கிட்டா சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்ளோதான் ஆனால் அதுக்குவேண்டிவீட்டுலே பல ரவுசுகளை பாத்துருக்கேன் என் வீட்டுலே லக்கிலி ஏவாளும் இவ்ளோவெறியா சினிமாப்பாக்கவே இல்லீங்க நல்லகாலம் இப்போது டிவிலேவறது அதுகூடப்பாக்கமுடியலீங்க வேண்டாம் இந்த குப்பை
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in