Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்மகள் வந்தாள்' பைரசி லீக், எப்படி வந்தது ?

30 மே, 2020 - 17:06 IST
எழுத்தின் அளவு:
How-ponmagal-vandhal-leaked-in-Piracy

சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் நேற்று(மே 29) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 29ம் தேதி பிறக்கும் 12 மணிக்கு அதை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஒன்றரை மணிநேரம் முன்னதாக 28ம் தேதி இரவு 10.30 மணிக்கெல்லாம் திடீரென படத்தை வெளியிட்டார்கள்.

அமேசான் பிரைம் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே படத்தை பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது, அதனால், வேறு வழியில்லாமல் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக படத்தை வெளியிடும் சூழ்நிலைக்கு அமேசான் தள்ளப்பட்டது.

தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் தளம் உடனடியாக வெளியிடும். வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களிலும் படத்தை வெளியிடுவதால் தான் தமிழ் ராக்கர்ஸ் படத்தை அங்கிருந்து படம் பிடித்து வெளியிடுகிறது என்று புகார் தெரிவித்து வந்தார்கள். சில சமயங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் இருந்தும் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஆனால், தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியான ஒரு படத்தை பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் எப்படி வெளியிட்டது என்ற சந்தேகம் திரையுலகத்தில் எழுந்துள்ளது.

படத்தைத் தயாரித்துள்ள சூர்யாவின் 2 டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்திடம்தான் படத்தின் இறுதிப் பிரதி இருக்கும். அங்கிருந்து நேராக அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு படத்தின் பிரதி சென்றிருக்கும். இடையில் எங்கிருந்து படம் உருவப்பட்டிருக்கும். ஹார்ட் டிஸ்க் மூலமாக படத்தின் பிரதி சென்றிருக்கும் அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் தனிப்பட்ட கம்ப்யுட்டரிலிருந்து அமேசான் நிறுவனத்திற்கு படத்தின் 'பைல்' அனுப்பப்பட்டிருக்கும்.

ஓடிடி தளத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் இதற்கு பல பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கையாண்டிருக்கும். அவ்வளவு சுலபத்தில் அவர்களிடமிருந்து படத்தின் பிரதியைத் திருடியிருக்க வாய்ப்பில்லை.

அடுத்து படம் வெளியாவதற்கு முன்பாக சில பல சினிமா பிரபலங்களுக்கு தனிப்பட்ட (பிரைவேட்) லின்க் மூலமாக படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அப்படி படம் பார்த்தவர்கள் மூலமாகக் கூட படத்தை கேமரா வைத்து படமாக்கியிருக்கலாம். அல்லது 'ஸ்கிரீன் கேப்சரிங்' முறையில் படத்தை அப்போதே டவுன்லோடு செய்திருக்கலாம்.

இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக படத்தை வேறு நாடுகளில் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக டவுன்லோடு செய்து இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கலாம்.

இந்தியத் திரையுலகில் முதல் முறையாக தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே முன்னணி நடிகர்களின் படங்களைத் தங்களது தளத்தில் வெளியிட அமேசான் முடிவு செய்த போதே அதை வேறு எந்த வகையிலும் 'காப்பி' ஆகி பரவாமல் இருக்க தடுத்திருக்கலாம். ஏற்கெனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ் தொடர்கள் உள்ளிட்டவை இப்படி பைரசி தளங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றைத் தடுக்க ஓடிடி நிறுவனங்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதும் தெரியவில்லை.

இதனிடையே, 'ஷேர்' முறையில் படங்களை அமேசான் நிறுவனத்திற்குக் கொடுத்த பின், இப்படி பைரசி வெளியானால், அது படத்தைக் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் நஷ்டத்தைக் கொடுக்கும் என்ற குரல் திரையுலகத்தில் வர ஆரம்பித்துவிட்டது.

அடுத்தடுத்து அமேசான் நிறுவனம் மட்டுமல்லாது, மற்ற சில ஓடிடி நிறுவனங்களும் நேரடியாக புதிய படங்களை வெளியிட பல கோடி ரூபாய் கொடுத்து படங்களை போட்டி போட்டு வாங்கி வருகின்றன. இந்நிலையில் அந்தப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டால் அது ஓடிடி வர்த்தகத்தையும் பெரிதும் பாதிக்கும்.

இந்தியாவில் உள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களோ, அரசுகளோ தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இந்தியாவில் தடுக்க முயற்சித்தும் அது நடைபெறவில்லை. அதே சமயம், ஓடிடி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இந்தியாவில் முற்றிலும் தடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அப்படி ஒருவேளை அது நடந்தால், இந்தியத் திரையுலகத்திற்கு பேருதவியாக இருக்கும். தமிழ்ராக்கர்ஸ் என்ற 'பெரும்' பூனைக்கு, ஓடிடி நிறுவனங்கள் 'மணி' கட்டுமா அல்லது பின்வாங்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
50 முறை முயற்சித்தோம் - வார்னர் வருத்தம்50 முறை முயற்சித்தோம் - வார்னர் ... மம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ஒரு படம் : அல்போன்ஸ் புத்ரன் விருப்பம் மம்முட்டி-அருண்விஜய் கூட்டணியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
05 ஜூன், 2020 - 11:51 Report Abuse
Nisha Rathi ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்ராக்கர் தான் இந்த இணையதளத்தை யாரும் நெருங்கிடாமல் தமிழ்ராக்கர் நிறுவனம் பாதுகாக்கவேண்டும் ஒரு சிலரின் அல்லது இந்து விரோதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்ராக்கர் நிறுவனத்திடம் உள்ளது
Rate this:
Tamil box - Tamilnadu,இந்தியா
31 மே, 2020 - 19:52 Report Abuse
Tamil box அமேசானில் ஓடிடி தளங்கள் வந்ததிலிருந்தே இதை தொடங்கி விட்டார்கள். படம் ரிலீஸ் ஆகும் நாளில் தியேட்டர் பிரிண்ட் வெளியிடுவார்கள்.. சில நாள்கள் கழித்து ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக படம் ரிலீஸ் ஆன உடனே அங்கிருந்து எடுத்து அதே ஒரிஜினல் தரத்தில் ஹெச்டி பிரிண்டாக தமிழ் ராக்கர்ஸில் வெளியிடுவார்கள். பெரிய படம், சிறிய படம் எல்லாத்துக்கும் இதே கதி தான். படங்கள் மட்டுமல்ல நேரடியாக ஓடிடி யில் வெளியாகும் வெப் சீரிஸ்களை கூட எடுத்து வெளியிடுகிறார்கள். இந்த படமும் அப்படி தான். ஓடிடி யில் இருந்து பிரிண்ட் எப்படி எடுக்கிறார்கள் என்ற தொழில்நுட்பம் அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் நிச்சயமாக நீங்கள் சொல்வது போல கேமரா வைத்தெல்லாம் ஹெச்டி பிரிண்ட் எடுக்க முடியாது.
Rate this:
aroune - nottingham,யுனைடெட் கிங்டம்
31 மே, 2020 - 18:00 Report Abuse
aroune There is no need for films. We do not need theatres. Film industry is not an essential workhouse. It is one of the countries top industry with black money and corruption. Not many work there for passion and interest. They work merely for money and fame. Whats is so special the actor or actress have done to the society and to the public,that they are paid in crores Even a life saving doctor is paid in thousands
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
31 மே, 2020 - 10:44 Report Abuse
Ganapathy ஒருவன் தான் உற்பத்தி செய்த பொருளை எப்படி விநியோகம் செய்வது என்பது உற்பத்தியாளரின் உரிமை. அதை தடை செய்யமுடியாது. ஆனால் அந்த பொருளை திருட்டுத்தனமா வாங்கி விற்பது என்பது மன்னிக்கமுடியாத குற்றம்., எப்படி தேர்வில் காபி அடித்து எழுதி மார்க் வாங்குவது தவறோ, அதை விட கொடும் தவறு, ஒரு கலைப்பொருளை திருடி சம்பாதிப்பது .தமிழ் ராக்கர்ஸ் எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பின்னனியில் யார் உள்ளனர் என்பது இன்னமும் அரசுக்கு தெரியவில்லை என்பது நம்பும் விடயம் அல்ல.எப்படி நீலப்படங்களை பார்க்கும் மக்களை போலீஸ் பிடிக்கிறதோ , அதுபோல இதற்கு ஒரு தீர்வு கண்டால் மட்டுமே இந்த திருட்டை ஒழிக்க முடியும். இப்படி இருக்க, இனி திரை அரங்கில் படம் பார்ப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை, சமூக இடைவெளி விட்டு படம் பார்க்கவேண்டும் என்றால், பகுதி ஆட்களே பார்க்கமுடியும், அப்போ மீண்டும் டிக்கெட் கட்டணம் உயரும், பாப்கார்ன் வாங்கின, சினிமா டிக்கெட் இலவசம் என்ற நிலைமை வரும்.
Rate this:
31 மே, 2020 - 10:29 Report Abuse
Venkates Venkates thanks Tamil rockers 🙏🙏🙏🙏🙏🙏
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in