Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காட்மேன் தொடரை தடை செய்ய விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை

30 மே, 2020 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Vishva-Hindu-Parishad-demands-to-to-ban-godman-webseries

டேனியல் பாலாஜி, ஜெய்பிரகாஷ், சோனியா அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே யூ டியூப்பிலிருந்து அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த தொடரையே தடை செய்ய வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காட்மேன் என்ற வெப் சீரிசின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில் இந்து மதத்தையும், பிராமணர் சமூகத்தையும் அவதூறாக சித்தரித்துள்ளனர். இந்து சாமியார்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த தொடரை தடை செய்வதுடன் இதில் நடித்தவர்கள், இயக்கியவர், வெளியிட உள்ள நிறுவனம் ஆகியவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்மன்னிப்பு கேட்ட 'பொன்மகள் ... கொரோனா விழிப்புணர்வு பாடல் : எஸ்.பி.பி., லிடியனுடன் கை கோர்த்த இளையராஜா கொரோனா விழிப்புணர்வு பாடல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SENTHIL - tirumalai,இந்தியா
30 மே, 2020 - 20:01 Report Abuse
SENTHIL ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுவோர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நடுநிலை நக்கிகள் இனிமேலாவது யோசிக்க வேண்டும்.யோசிக்க வேண்டும்.யோசிக்க வேண்டும்.யோசிக்க வேண்டும். எதையெல்லாம் இழந்து நிற்கிறோம் என யோசிக்க வேண்டும்.
Rate this:
Rajarajan - Thanjavur,இந்தியா
30 மே, 2020 - 16:47 Report Abuse
Rajarajan பிராமணர்களையும், மற்ற பிரிவினரையும், விடாமல் முட்டிமோதி வைத்தால் தான், திராவிட பெயரில் ஆரம்பிக்கும் கட்சிகளின் பொழைப்பு நடக்கும். பிராமணரால் தான் மற்ற பிரிவினருக்கு வாழ்க்கை போய்விட்டது, அவர்கள் கேவலமாக நடத்துகின்றனர் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் மட்டும் தாழ்த்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் பெண்கொடுத்து / பெண் எடுக்க மாட்டார்கள். இடவொதுக்கீட்டை இவர்களது குடும்பமே, தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பர். மற்றவருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார். தாழ்த்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, தங்கள் வீட்டினில் உள்ளே விடவே மாட்டார்கள். குடி / ஜாதி துவேஷம் / மோதல் போன்றவற்றை செய்து, அதில் குளிர் காய்வார். இவர்களது பிரிவினரே இதை உணராத வரையில், இவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.
Rate this:
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30 மே, 2020 - 14:10 Report Abuse
Vyjayanthy. S தமிழ் நாட்டில் நீங்கள் இந்து மதத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் கூறலாம், அதுவும் இந்த web series இயக்குனர் வேறு மதத்தை சேர்த்தவர், மிக பெரிய வரவேற்பு கிடைக்கும். இவருடைய மதத்தை பற்றி ஒரு வார்த்தை அதில் சேர்க்க முடியுமா அவரால் ?
Rate this:
Raj - Chennai ,இந்தியா
30 மே, 2020 - 13:22 Report Abuse
Raj Censor board is not functioning. Faulty information and broad ministry
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in