Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி

30 மே, 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
TV-Serial-shooting-60-members-allowed:-Govt.,-order

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சின்னத்திரையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நடிகர், நடிகைகள் நிதி உதவி அளித்து வந்தார்கள்.

கடந்த வாரம் 20 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்ற தமிழக அரசு அனுமதி அளித்தது. 200 பேர் இருந்தால்தான் ஒரு படப்பிடிப்பு நடத்த முடியும் என்கிற நிலையில் 20 பேரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேர் பங்கேற்க அனுமதி வேண்டும் என்று பெப்சி அமைப்பும், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்றுக் கொண்டது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(மே 30) விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அதிகபட்சமாக 60 பேரை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற இடங்களில் நடத்துகிறவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடமும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பு நடக்கும்போது அரசு அவ்வப்போது விதிக்கும் கட்டுப்பாடுகளை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் மன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் மன்னிப்பு கேட்ட 'பொன்மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in