Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா

30 மே, 2020 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Is-next-alien-attack-says-RGV

கொரோனா வந்தாலும் வந்தது, அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக என்ன வருமோ என மக்கள் ஒரு பக்கம் பயந்து கொண்டிருக்க, கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் தாக்குதல் வட இந்தியாவில் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனாவை போன்று வெட்டுகிளியும் தென்னிந்தியா பக்கம் வராது என்றார்கள். ஆனால் இப்போது தமிழகத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாழைத்தோட்டத்தில் புகுந்துவிட்டது. கொரானோ தாக்கத்தைப் பற்றி எழுதிய சினிமா பிரபலங்கள் அடுத்து வெட்டுக்கிளிகள் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா, “வைரஸ்கள், வெட்டுக்கிளிகள் அடுத்த என்ன ஏலியன் தாக்குதலா,” என கேள்வி கேட்டுள்ளார். மேலும், 'மொத்த உலகமே லாக்டவுனில் இருக்க வெட்டுக்களிகள் உலக சுற்றுலாவில் இருக்கின்றன,” என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த உலகத்தில் நம்ப முடியாத சில விஷயங்கள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. சினிமாவில் வைரஸ்கள், வெட்டுக்கிளிகளைப் பற்றி ஏற்கெனவே காட்டிவிட்டார்கள். அவை வந்துவிட்டன. ஏலியன்ஸ்களையும் காட்டிவிட்டதால்,. அடுத்து என்ன ஏலியன்கள் வருகையா?.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுனுக்கு திருமணம்!மீரா மிதுனுக்கு திருமணம்! பிகினி அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் கர்ச்சீப்  !! பிகினி அதிர்ச்சியே முடியவில்லை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

30 மே, 2020 - 15:47 Report Abuse
மதுமிதா வெட்டுக் கிளிகளை உணவாக உண்பவர்கள், பறவைகள் கிடையாதா? கிடையாதா? டெங்கு கொசுவை போல் இது ஆபத்தை ஏற்படுத்துமா? இந்த கிளிகள் பற்றிய முழுமையான தகவல்கள் நம் பத்திரிகை தந்தால் தேவலை.
Rate this:
Changes - Pkt,இந்தியா
30 மே, 2020 - 15:13 Report Abuse
Changes இந்த கூத்தாடி கூட்டத்திற்கு கேள்விகேட்பதை தவிர வேறு என்ன தெரியும்? ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டியது தானே? படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு அதில் ஒரு கோடி கொரோனாவிற்கு கொடுத்தகூட்டம்.
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
30 மே, 2020 - 12:44 Report Abuse
PANDA PANDI இந்த வெட்டு கிளிகள் CORONA வை எதிர்க்கும் சக்தி கொண்டவை. இவை வரும் இடத்தில CORONA இருக்காது.என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்க்ள் இந்த அறிவு ஜீவிகள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in