Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப்போகும் பொன்னியின் செல்வன்: புதிய படத்தில் கவனம் செலுத்தும் மணிரத்னம்

29 மே, 2020 - 19:59 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-selvan-may-be-postponed

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கும், சினிமாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். உலகின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களில் ஒன்றாக கருதப்படும் இதை திரைப்படமாக எடுக்க மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் விரும்பியது, ஜெமினி ஸ்டூடியோ விரும்பியது. அவர்கள் கைவிட்ட நிலையில் எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வனை எடுக்க முயன்றார். அதன் பிறகு சிவாஜி முயற்சித்தார். கடைசியாக கமல் முயற்சித்தார்.

இப்படி அனைவரின் முயற்சிகளும் கைவிடப்பட்ட நிலையில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை தனது கனவு படமாக அறிவித்து அதனை தொடங்கினார். ஸ்கிரிப்ட் பணிகளுக்காக மட்டும் 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகமாக தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் எனப் பல நடிகர்களையும் ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். நடிகர்கள் மட்டுமல்லாமல் கேமராவுக்கு ரவிவர்மன், எடிட்டிங்குக்கு ஸ்ரீகர் பிரசாத், கலைக்கு தோட்டா தரணி, இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என அந்தந்த துறையில் நம்பர் ஒன் கலைஞர்களை ஒப்பந்தம் செய்தார்.

ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், தாய்லாந்து காடுகளிலும் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மாத ஊரடங்கு எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், நீக்கப்பட்டாலும் பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்ட படத்தை குறைந்த நபர்களை வைத்து படமாக்க முடியாது. பொன்னியின் செல்வன் படத்தின் ஷெட்யூலை வைத்தே இதில் நடித்துக் கொண்டிருக்கும் பல்வேறு நடிகர்களும் தங்களின் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தனர்.

இனி அதனை மாற்றம் பண்ணுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதனால் இப்போதைக்கு பொன்னியின் செல்வனை தள்ளி வைத்து விட்டு சிறிய பட்ஜெட்டில் காதல் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். இதில் அரவிந்த்சாமி ஹீரோ என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கூத்துப்பட்டறையில் இருந்து மற்றுமொரு நடிகர்கூத்துப்பட்டறையில் இருந்து ... ஆசிரம குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் விளக்கம் ஆசிரம குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in