Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : காமெடியில் முத்திரை பதித்த முத்துலெட்சுமி

29 மே, 2020 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-TPM

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் அவ்வப்போது தங்கள் முத்திரையை பதித்து வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் ஆட்சி செய்தார்கள். மனோரமா, சச்சு, கோவை சரளா தொடங்கி இப்போது மைனா நந்தினி வரை இந்த பட்டியல் தொடருகிறது. இவர்களுக்கு முன்னாடியாக காமெடி கேரக்டரில் சாதனை படைத்தவர்கள் இருவர். ஒருவர் டி.ஏ.மதுரம், இன்னொருவர் டி.பி.முத்துலட்சுமி. அவருக்கு இன்று 12வது நினைவு நாள்.

அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இளைஞர்கள் சென்னைக்கு ஓடி வருவார்கள். ஆனால் முதன் முதலாக ஓடிவந்த பெண் டி.பி.முத்துலட்சுமி. சென்னையில் அவரது தாய்மாமன் பெருமாள் வீட்டுக்கு வந்தார். பெருமாள் சினிமாவில் பல பணிகளை செய்யும் ஆல் ரவுண்டராக இருந்தார். அவரே டி.பி.முத்துலட்சுமிக்கு நடனம் கற்று கொடுத்து, நடிப்பு கற்று கொடுத்து வாய்ப்பும் வாங்கிக் கொடுத்தார்.

சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் மகாபலி சக்கரவர்த்தி, மின்மினி , தேவமனோகரி, பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.

1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு முழுநேர காமெடி நடிகை ஆனார். 300 படங்களில் நடித்துள்ள முத்துலட்சுமி குணசித்திர வேடத்திலும் தனி முத்தரை பதித்தார்.

தன்னை வளர்த்து ஆளாக்கி தாய்மாமான் பெருமாளுக்கு நன்றி கடனாக அவரது மகனை தத்தெடுத்து வளர்த்தார். அவர்தான் இயக்குனர் டி.பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள், தாயா தாரமா, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அமேசானுக்கு பேரதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ் - ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ்அமேசானுக்கு பேரதிர்ச்சி தந்த தமிழ் ... கூத்துப்பட்டறையில் இருந்து மற்றுமொரு நடிகர் கூத்துப்பட்டறையில் இருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
04 ஜூன், 2020 - 17:02 Report Abuse
Bhaskaran இயல்பான நடிப்பால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30 மே, 2020 - 08:31 Report Abuse
skv srinivasankrishnaveni தங்கவேலு முத்துலக்ஷுமி சூப்பர் காமெடியா கலக்குவாங்க அறிவாளி சினிமாலே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in