பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் | ஓடிடி ரிலீஸ் : தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு | 'பொன்னியின் செல்வன்' பின்னணி இசையில் டிரம்ஸ் சிவமணி | மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர் | திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி | அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் |
சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன் அமேசான் பிரைம் தளத்தில் இன்று(மே 29) வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். இந்த புதிய முறைக்கு திரையுலகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. தயாரிப்பாளர்கள் ஆதரவளிக்க, தியேட்டர்காரர்கள், வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று 29ம் தேதி ஆரம்பமாகும் மணித்துளியில் அதாவது 28ம் தேதியின் நடு இரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் 'பொன்மகள் வந்தாள்' தன் முதல் ஒளிபரப்பை துவக்கும் என்றார்கள்.
ஆனால், நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் 'எச்டி' பிரின்ட்டையே அமேசான் வெளியிடுவதற்கு முன்பாகவே வெளியிட்டுவிட்டது. அதனால், வேறு வழியில்லாமல் அமேசான் தளமும் 12 மணிக்கு முன்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒளிபரப்பை துவக்கினார்கள்.
பொதுவாக, தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியான அன்றுதான் தமிழ் ராக்கர்ஸ் சுமாரான, மிகச் சுமாரான பிரின்ட் தரத்தில் வெளியிடும். ஆனால், உலகில் உள்ள ஓடிடி தளங்களில் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான் முதல் முறையாக ஒரு முன்னணி நடிகையின் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாக வெளியிடுவதற்கு முன்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது.
இது நாள் வரையில் தயாரிப்பாளர்கள் எவ்வளவோ முயன்றும் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தங்கள் வசம் மிகப் பெரும் தொழில்நுட்ப வசதி, வல்லுனர்களைக் கொண்ட அமேசான் நிறுவனத்தாலேயே இந்த 'பைரசி' திருட்டைத் தடுக்க முடியாதது அவர்களுக்கு பெரும் தோல்வி என்றுதான் திரையுலகில் கருகிறார்கள்.
இது அவர்களுக்கு கடும் சவாலும் கூட. அடுத்து ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள படம் உள்ளிட்ட மேலும் 6 படங்களை வெளியிட உள்ளார்கள். அந்தப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் இப்படி முன்பே வெளியிட்டுவிட்டால் மிகப் பெரும் நஷ்டத்தை அந்நிறுவனம் சந்திக்க வேண்டி இருக்கும்.
'பொன்மகள் வந்தாள்' படத்திற்கு நிகழ்ந்த பைரசி திருட்டு போல அடுத்த படங்களுக்கு நிகழாமல் தடுத்தால்தான், பல கோடி கொடுத்து படங்களை வாங்கும் அவர்கள் நஷ்டத்தை சந்திக்காமல் லாபத்தைப் பார்க்க முடியும்.