நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
தமிழில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.. இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அவரை முதன்முறையாக மலையாள திரையுலகிற்கு அழைத்து சென்றுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன். ஆம்.. தற்போது மலையாளத்தில் மஞ்சு வாரியர், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடிக்க 'ஜாக் அன்ட் ஜில்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன்.
இந்தப்படத்தை தமிழ் மலையாளம் என இருமொழி படமாக இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன்.. அதனால் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றில் மலையாளத்தில் பிரபல காமெடி நடிகர் சௌபின் சாஹிரையும், தமிழில் அதே கேரக்டரில் யோகிபாபுவையும் நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.
தமிழில் இந்தப்படம் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. தர்பார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சமயத்திலேயே கிடைத்த இடைவெளிகளில் 'ஜாக் அன்ட் ஜில்' படத்தை இயக்கி வந்தார் சந்தோஷ் சிவன். இப்போது கிட்டத்தட்ட முழுப்படத்தையும் முடித்து ரிலீஸுக்கு தயார்நிலையில் வைத்துள்ளார் என்றே சொல்லப்படுகிறது.