துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
திறமையான நடிகை என பெயர் எடுத்த நடிகை பார்வதி ஏனோ அதிக படங்களில் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இல்லாதவர். கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் பார்வதி கடந்த இரண்டு வருடங்களில் வெறும் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதற்கு இன்னொரு காரணம் அவர் விரைவில் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அதனால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மூன்று படங்களில் இருந்து கூட விலகிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
அதற்கேற்றவாறு தான் இயக்கவுள்ள புதிய படத்தின் ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பார்வதி டைரக்ஷன் குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்வதற்காக இரண்டு மாத டைரக்ஷன் கோர்ஸ் படிப்பதற்காக மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவிற்கு செல்ல இருந்தார். திரும்பி வந்ததும் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் தனது புதிய படத்தை அவர் இயக்க ஆரம்பிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அவரது அமெரிக்க பயணம் தடைபட்டது. அதனால் தற்போது இந்த ஊரடங்கு சமயத்தில் தனக்கு கிடைத்த நேரத்தை வீணாக்காமல் ஒன்றுக்கு இரண்டாக தனது படங்களின் ஸ்க்ரிப்ட்டை பக்காவாக எழுதி முடித்துவிட்டாராம் பார்வதி. ஒன்று அரசியல் பின்னணியிலும் இன்னொன்று ஹாரர் பின்னணியிலும் எழுதப்பட்டுள்ளதாம். இதில் எதை முதலில் படமாக்க போகிறார் என்பது பார்வதி மட்டுமே அறிந்த ரகசியம்.