‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
ஒருபக்கம் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பேச்சு வீரர் என்றாலும் இன்னொருபக்கம் காரியத்திலும் செயல்வீரர் தான் என தன்னை நிரூபித்துள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற திரையுலக பிரபலங்களை போல ரிலாக்ஸாக ஓய்வெடுக்காமல் தான் இயக்கி முடித்திருந்த 'க்ளைமாக்ஸ்' படத்தை நாளை (மே-29) ஒடிடியில் ரிலீஸ் செய்கிறார். இன்னொரு பக்கம் இந்த ஊரடங்கு சமயத்திலேயே கொரோனா வைரஸ் என டைட்டில் வைத்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
ஒரு சாம்பிளுக்காக அந்தப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ராம்கோபால் வர்மா. பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனே இதைப்பார்த்து அசந்துபோய் வர்மாவை பாராட்டி இருக்கிறார். தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அகஸ்திய மஞ்சு என்பவர் இயக்கியுள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக ஒரு குடும்பத்துக்குள்ளேயே எவ்வளவு கருத்து வேறுபாடு உருவாகின்றன என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வருகிறது.