Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் தொல்லைகளால் சினிமாவில் இருந்து விலகினேன்: மனம் திறந்த கல்யாணி

28 மே, 2020 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Actress-Kalyani-replied-why-she-quit-cinema

கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் தனது பெயரை பூர்ணிமா என்று மாற்றிக் கொண்டு ஹீரோயினாக 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்து விடவே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார். அடுத்து 'பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகை ஆனார். அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தான் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

"பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்" என்று கூறுவார்கள். அம்மாவுக்கு அட்ஜெஸ்மெண்ட் என்றால் தேதி சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு. அதற்கு ஓகே சொல்வார். அதன் பிறகுதான் அட்ஜெஸ்மெண்ட் என்பதற்கு பொருள் தெரிந்தது. அதன்பிறகு அட்ஜெஸ்மெண்ட் என்ற வார்த்தையை கேட்டாலா போனை கட் பண்ணி விடுவார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் என்னை இரவில் 'பப்பு'க்கு அழைத்தார். நான் மாலையில் 'காப்பி ஷாப்'பில் சந்திக்கலாம் என்றேன். அதன் பிறகு அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இல்லை. இப்படி பல கசப்பான அனுபவங்களால் தான் ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம், என்று ஒதுங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
டெஸ்ட் எழுதணும் - ராஷி கண்ணா கவலை !!டெஸ்ட் எழுதணும் - ராஷி கண்ணா கவலை !! டிக்கிலோனா: சந்தானத்தின் 3 வேடம் வெளியானது டிக்கிலோனா: சந்தானத்தின் 3 வேடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Subramaniam Poopal - Bonn,ஜெர்மனி
02 ஜூன், 2020 - 12:55 Report Abuse
Subramaniam Poopal உண்மையில் ஒரு நல்ல நடிகைக்குரிய அத்தனை தகுதி இருந்தும் திரை உலகின் அட்பதானதால் இப்படி நடக்கிறதே
Rate this:
sundara - tirunelveli,இந்தியா
01 ஜூன், 2020 - 13:10 Report Abuse
sundara கோடம்பாக்கத்திற்கு இதெல்லாம் கொசுறு நீயூஸ்.
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
30 மே, 2020 - 17:26 Report Abuse
M Selvaraaj Prabu அம்மாவைதானே அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள்??
Rate this:
Tamil - chennai,இந்தியா
30 மே, 2020 - 09:06 Report Abuse
Tamil இவர் சொல்லுவது உண்மை தான். குரங்கு மாத்ரி இருக்கும் தயாரிப்பாளர் வாரிசு நடிகர்களின் வாரிசு அரசியல்வாதி வாரிசு பலருக்கு படம் தோல்வி அடைந்தாலும் மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும். அதுவேய மற்றவர்கள் என்றல் ராசி இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று கேரளா மற்றும் வடஇந்திய நடிகைகள் அவர்களே தூது அனுப்புவார்கள்.ஸ்ரீ ரெட்டி பணத்தை வாங்கி கொண்டு பலரின் பெயர்களை மறைத்து பணித்து போய்விட்டார். பணம் வாங்காமல் proof உடன் பல நடிகர் தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர் வெளிக்கொண்டு வரவேண்டும். டிவி சீரியல் அட்ஜஸ்ட்மென்ட் தான்.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
30 மே, 2020 - 05:36 Report Abuse
Allah Daniel அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சிருந்தா..இந்நேரம் பெரிய நடிகை ஆகியிருக்கலாம்...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in