Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இது தேவையா ஆல்யா - சஞ்சீவ்?

27 மே, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Sanjeev---Alya-manasa-bday-celebration

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள போதும் சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சில இடங்களில் மக்களுக்கு இன்னும் கடும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆனாலும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும் போதே தெரிகிறது.

ஊரடங்கின் ஆரம்பித்தில் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள், தற்போது மீண்டும் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர். நடிகை மைனா நந்தினி தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடிய வீடியோ வெளியானது.

அதேபோல் தற்போது சஞ்சீவ் - ஆல்யா கொண்டாட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆல்யாவின் பிறந்நாளையொட்டி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பார்ட்டி ஒன்றை சஞ்சீவ் ஏற்பாடு செய்தார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரவு 12 மணிக்கு அவர்களது வீட்டு மொட்டை மாடியில் வைத்து பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது. ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக அவர்கள் பொழுதை கழித்துள்ளனர். இந்த வீடியோவை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. அதேபோல் யாருமே மாஸ்க் அணியவும் இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், சஞ்சீவ் - ஆல்யாவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சுசீந்திரனின் காதல் கடிதம்சுசீந்திரனின் காதல் கடிதம் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய காட்மேன் டீசர் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
28 மே, 2020 - 14:09 Report Abuse
Selvaraj Chinniah மாநில அரசின் கண்களுக்கு இதுவெல்லாம் தெரியவில்லையா?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 மே, 2020 - 04:50 Report Abuse
Mani . V இதிலென்ன தவறு? இன்னும் சில மாதங்கள் லிவிங் டுகெதர் என்று ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டாமா? அடுத்த சில மாதங்களில் வேறு புதிய லிவிங் டுகெதர் பார்ட்னர் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட வேண்டாமா? (தினமலர் இது போன்ற கேவலமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்).
Rate this:
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
27 மே, 2020 - 19:38 Report Abuse
GURU THENI ஆட்டம் போடுறதுதுக்கு தான் டெய்லி அரசை கேக்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in