முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
மலையாளத்தில் காலேஜ் டேய்ஸ் காஞ்சி, தியான் என மூன்று படங்களை இயக்கியவர் ஜி.என்.கிருஷ்ணகுமார். தற்போது தமிழில் இவர் சசிகுமாரை வைத்து பரமகுரு என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகிகளில் ஒருவராக மலையாள திரையுலகை சேர்ந்த மானஸா ராதாகிருஷ்ணன் நடிக்க வித்யா பிரதீப் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மானஸா ஏற்கனவே ஜி.என்.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் இயக்கிய தியான் படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் தான்.
பரமகுரு படத்தின் படப்பிடிப்பு மூணார் பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் துவங்க இருந்த நிலையில் தான் ஊரடங்கு அமலுக்கு வந்ததாம். இந்தநிலையில் தெலுங்கில் இயக்குனர் ஹரிசங்கர், முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து இயக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம் மானஸா. இதுபற்றி கேட்டால் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். ஆனால் ஊரடங்கு முடிந்த பின்பே எந்த தகவலையும் உறுதியாக சொல்ல முடியும் என நழுவுகிறாராம் மானஸா.