Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்

27 மே, 2020 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Allow-50-members-in-television-shooting:-request-to-minister

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான தினக்கூலி பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்தது.

ஆனால் 200 பேர் பணியாற்றும் இடத்தில் 20 பேரை கொண்டு பணியாற்ற முடியாது. குறைந்தது 50 சதவிகிதம் பேரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்புவும், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசினர்.

அப்போது, சின்னத்திரை படப்பிடிப்பின்போது அதிகபட்சமாக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியினை தளர்த்தி அதிகபட்சமாக 50 பேருடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது: அரசு அனுமதி அளித்தபோதிலும் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. குறைந்தது 50 பேரையாவது அனுமதிக்க வேண்டும். என்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். முறையாக அறிவிக்கப்பட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில் நடக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதைஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் ... வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
27 மே, 2020 - 17:11 Report Abuse
GURU THENI நீங்க சென்னையில் கொரோனவை ஒரு லச்சம் ஆக்காமல் ஓய மாட்டீர்கள் அப்படித்தானே குஷ்பு மேடம் .இப்ப மக்களுக்கு சீரியல் தேவை இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in