Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை

27 மே, 2020 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-NTR

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் போன்று ஆந்திராவில் சினிமாவின் மூலம் மக்களின் மனங்களையும், நாட்டையும் ஆட்சி செய்தவர் என்.டி.ராமராவ், அவரின் 97வது பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வை.

நந்தமூரி தராகா ராமா ராவ் என்பதன் சுருக்கமே என்.டி.ஆர். ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார்.
விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது வாழ்க்கையை தொடங்கிய ராமா ராவ், பின்னர் உள்ளூர் பலசரக்கு கடையில் கணக்கப் பிள்ளையாக வேலைக்குச் சேர்ந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது வரைத் தொடர்ந்த அவர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரி ஆனார்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வருமானத்திற்கு ஆந்திர சிவில் சப்ளை கார்பரேஷனில் வேலை பார்த்தார்.

1949ல் வெளியான எல்.வி.பிரசாத் இயக்கி படமான 'மன தேசம்' படத்தில் போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார். பாதாள பைரவியும், மல்லீஸ்வரியும் , அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் நடித்த ஸ்ரீ மத்விரதா பர்வம் அவர் நடித்த முதல் புராண படம். அதன் பிறகு அவர் நடித்த புராண படங்களும், அதில் அவர் ஏற்ற கிருஷ்ணன் கேரக்டரும் அவரை நிஜ கடவுளாக பார்க்க வைத்தது. ஆட்சி கட்டிலையும் கொடுத்தது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில்நான் காட்டியது ஜெர்ஸி, ... டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
27 மே, 2020 - 21:17 Report Abuse
Bhaskaran குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் சார் பதிவாளராக தன வாழ்க்கையை துவக்கியவர் ராமாராவ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in