Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில்

27 மே, 2020 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Gautham-menon-reply-to-critics

இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்றை வெளியிட்டார். இதில் சிம்பு, த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப்படம் திருமணமாகி விட்ட இருவர் காதல் தழும்ப பேசுவது கள்ளக் காதலை ஊக்குவிப்பதாக இருக்கிறது என விமர்சனங்கள் வந்தது. இதற்கு பதில் அளித்து கவுதம் மேனன் கூறியிருப்பதாவது:

இந்தப் படம் எடுத்தது, நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எப்போதுமே என் படத்தைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சுமாராக இருக்கிறது என்பவர்கள் இருந்திருக்கிறார்கள். எந்த விமர்சனத்தையுமே நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

என் எண்ணம், ஊரடங்கின் போது இரண்டு கதாபாத்திரங்கள் பேசுவதைக் காட்ட வேண்டும் என்பதே. மேலும் இது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு திரைக்கதையிலிருந்து ஒரு காட்சி தான். எனக்கு கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர் தான் படத்தை வசை பாடுகிறார்கள்.

சிம்புவைக் கேட்டால், அந்த மீம் எல்லாம் அவருக்கெதிராக யாரோ காசு கொடுத்து ஆள் வைத்து செய்கிற வேலை என்கிறார். எனக்குத் தெரிந்த பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லோருமே கலவையான விமர்சனங்கள் வருவது நல்லது என்றே கருதுகிறார்கள்.

படம் குறித்து ஏதோ விவாதம் நடக்கிறது. அதற்காக தானே படம் எடுக்கிறோம். இதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே எனக்குப் பெரிய விஷயம் தான். ஏனென்றால் நான் பிகில், சர்கார் போன்ற படம் எடுக்கவில்லை. குறும்படம் எடுத்திருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் அது மக்களைச் சென்றடைந்திருக்கிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்துதேனீக்களிடமிருந்து அரசு பாடம் ... என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kuppan - Chennai,இந்தியா
27 மே, 2020 - 16:06 Report Abuse
Kuppan உங்களோட வக்கிர எண்ணத்தைதான் கார்த்திக் என்கிற கதா பாத்திரம் மூலம் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in