Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து

27 மே, 2020 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Andrea-slams-govt

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக திடீர் ஊடரங்கு அமுலுக்கு வந்தது. மக்கள் 2 மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் காரணம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

என் வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில், தேனீக்கள் பெரிய கூடு ஒன்றை கட்டி இருந்தது. அவற்றை பார்த்து நான் பயந்தேன். ஆனால் நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்தலுமின்றி வேறு இடத்துக்கு நகர்த்த சிலரை அழைத்தேன். என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக் கொல்லி அடித்து அவற்றை கொல்வது, இன்னொன்று அவற்றோடு வாழப் பழகிக் கொள்வது.

எனது பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் நம் சுற்றுசூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள் தான்.

இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும், இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை பற்றியதும் தான். என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு.

ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல் தான் இல்லை என்பது அதற்கு தெரியும், தேன் கூடு சிறப்பாக இயங்க வேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும். தேனீக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
தயாராகிறது, 'தேசிய தலைவர்தயாராகிறது, 'தேசிய தலைவர் நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் நான் காட்டியது ஜெர்ஸி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

mei - கடற்கரை நகரம்,மயோட்
28 மே, 2020 - 09:55 Report Abuse
mei என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை
Rate this:
28 மே, 2020 - 09:25 Report Abuse
அதர்வா . ஏழைகளுக்காக வசனம் கூவிட்டு அவ்டி கார் ஏறி வீட்டுக்கு போயிட்டே இருக்குற கும்பல்.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28 மே, 2020 - 08:22 Report Abuse
VENKATASUBRAMANIAN Without knowing basic problem she is simply telling her view. First let her study the situation, then comment.
Rate this:
s vinayak - chennai,இந்தியா
28 மே, 2020 - 06:39 Report Abuse
s vinayak தொழிலாளர் பற்றி கவலைப்படுகிறார். ஞாயம்தான். மேலும் இவர் போன்றவர்களுக்கு லக்ஷ்மன் ரேகா, social distancing, ....ரொம்ப நாள் பொறுத்துக்கொள்ள முடியாது.
Rate this:
RAJA - TRICHY,இந்தியா
28 மே, 2020 - 06:26 Report Abuse
RAJA அனிருத்க்கு ஆலோசனை கூற
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in