Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடநாட்டு கலாச்சாரம் இப்போது கேரளாவிலும் ; டொவினோ தாமஸ் வேதனை

26 மே, 2020 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-reaction-of-his-movie-set-destroyed

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி -2 படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தற்போது வளர்ந்துவிட்ட ஒரு கதாநாயகனாக மாறியுள்ள இவர், மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற சூப்பர்மேன் கதையில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைகாட்சிக்காக கேரளாவில் காலடி என்கிற பகுதியில் போடப்பட்டிருந்த சர்ச் செட்டை, பஜ்ரங்தள் என்கிற அமைப்பினர் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த நிகழ்வு படக்குழுவினரையும் திரையுலகத்தினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுபற்றி படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் கூறும்போது, “ஊரடங்கு துவங்குவதற்கு முன்புதான் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க முடிவுசெய்திருந்தோம்.. இதற்காக ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் வ்லாட் ரிம்பர்க் ஆலோசனைப்படி ஆர்ட் டைரக்டர் மனு வெங்கட் இந்த சர்ச் செட்டை மிகப்பெரிய பொருட்செலவில் அமைத்திருந்தார். இதற்காக அனைத்து அதிகாரிகளிடமும் முறைப்படி அனுமதி வாங்கித்தான் இந்த சர்ச் செட் நிறுவப்பட்டது.

ஆனால் தற்போது மதத்தை காரணம் காட்டி இந்த செட் சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் எங்கள் அறிவுக்கு கொஞ்சமும் புரிபடவில்லை. வடமாநிலங்களில் உள்ள சில மத அமைப்புகள் இதுபோல சினிமா அரங்குகளை சேதப்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இங்கேயும் அந்த கலாச்சாரம் துவங்கிவிட்டது. இந்த செயல் எனக்கு வருத்தத்தையும், கவலையையும் தருகிறது. இந்த விஷயத்தில் முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்” என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் டொவினோ தாமஸ்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
ரஷ்ய மொழியில் டப் செய்யப்படும் மம்முட்டியின் மாஸ்டர்பீஸ்ரஷ்ய மொழியில் டப் செய்யப்படும் ... திருமணத்திற்கு 'நோ' சொன்ன பிரேம்ஜி திருமணத்திற்கு 'நோ' சொன்ன பிரேம்ஜி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Santhosh Kumar - male,மாலத்தீவு
28 மே, 2020 - 16:51 Report Abuse
Santhosh Kumar இந்த சினிமா செட்ட உடைத்து சமூகவிரோதிகள் அல்ல . நான் அறிந்தவரையில் இந்த செட் அப்புறப்படுத்துவதற்கு அந்த செட் இருக்கும் பஞ்சாயத்து நோட்டீஸ் அனுப்பியது. இதனால் படத்தின் விளம்பரத்திற்காக தயாரிபள்ளரே ஆள் வைத்து இந்த செட் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
Rate this:
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
28 மே, 2020 - 14:06 Report Abuse
Selvaraj Chinniah வந்தேறி ஆகிய நீங்கள் எங்கள் பாரத திருநாட்டின் கலாசாரத்தை கெடுத்தீர்கள். எங்கள் நாட்டின் செல்வத்தை எல்லாம் கொள்ளை அடித்தீர்கள். அப்போதெல்லாம் எங்கள் முன்னோர்கள் செய்வது அறியாது, தெய்வமே நீ இருந்தால் கேளு? என்று புலம்பிவிட்டு இருந்துவிடடார்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கலாசாரத்தையும், எங்கள் உரிமைகளையும் விட்டு கொடுக்க முடியாது. உனக்கே, இவ்வளவு திமிர் இருந்தால், எனக்கு எவ்வளவு இருக்கும்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
28 மே, 2020 - 10:31 Report Abuse
M.Sam thankalathu karuthu varavaerkapadavaiyathu .intha vadanaan puthi தேனகத்துக்கு ஒத்துவராது வடநாட்டான் மந்த புத்தி படைத்த வெறியன் எவன் கலாசாரம் பாவம் நிறைந்தது எவனை பின்பற்றுபவர்கள் அறிவு அற்றவர்கள் . இந்தியாவின் பெருமைக்கு மேக்க முக்கிய காரணம் தென்னக மக்களே வடகத்தியன் ஒரு போதும் இல்லை எவன் வந்தேறி நாம் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
28 மே, 2020 - 08:09 Report Abuse
PANDA PANDI ஹிந்து அமைப்பினர் எல்லாம் சர்வ அதிகாரம் படைத்தவர்களோ.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
28 மே, 2020 - 05:22 Report Abuse
NicoleThomson ஏண்டா நீ வம்பு வளர்பதற்க்கென்றே அவர்களின் வழிபாட்டு தளத்தின் முன்னால் நமது வழிபாட்டு தளத்தை செட் போடுவாய் , அதனை எடுங்கடா என்றால் தவறு என்பாயா? வேண்டும் என்றே வம்பு வளர்த்து நமது மதத்தின் பெயரை ஏனடா கெடுகிறாய்
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in