Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனி தனி குரலில் பாடவில்லை: டி.எம்.எஸ் உடைத்த ரகசியம்

25 மே, 2020 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-Singer-TMS

சவுராஷ்டிரா குலத்தில் பிறந்து தமிழில் பாண்டியத்தியம் பெற்று, 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தன் இசையால் ஆட்சி செய்த டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சவுந்தர்ராஜனின் 7வது நினைவு நாள் இன்று. அவரைப் பற்றிய ஒரு சுவையான தகவல்.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே பாடி வந்தார் டி.எம்.சவுந்தர்ராஜன். இருவருமே அவரது பாடல்களுக்காக காத்திருந்தார்கள். இவர்களுக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள், அழியாப்புகழ் பெற்றவை. 1950 - -90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப்பாடல்களையும் பாடினார்.

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ் பாடிய பாடல்களை திரையில் கேட்கும்போது அச்சு அசலாக எம்.ஜி.ஆர் பாடுவது போலவே இருக்கும். சிவாஜிக்கு பாடல்களை திரையில் பார்க்கும்போது அச்சு அசலாக சிவாஜி பாடுவது போலவே இருக்கும். இதனால் டி.எம்.சவுந்தர்ராஜன் இருவருக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால் உண்மையை ஒரு நாள் போட்டு உடைத்தார் டி.எம்.சவுந்தர்ராஜன். சென்னை காமராசர் அரங்கில் நடந்த ஒரு இசை விழாவில் பேசிய அவர் "பல பேர் நான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக நினைக்கிறார்கள். நான் அப்படி பிரித்து பாடியதே இல்லை. அவர்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப பாடுவேன் அதனால் அப்படி தோன்றி இருக்கலாம்" என்று உண்மையை போட்டு உடைத்தார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை கொடுக்க, தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை ... ரசிகர்களின் கமெண்ட்டுக்கு கோபிக்காமல் பதில் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் கமெண்ட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

25 மே, 2020 - 23:37 Report Abuse
Randy Ranjit Real Super Star
Rate this:
sakthi - Covai,இந்தியா
25 மே, 2020 - 13:00 Report Abuse
sakthi டி எம் எஸ் அவர்கள் சிவாஜிக்கு அடிவயிற்றில் இருந்து பாடுவதாகவும், எம் ஜி ஆர் அவர்களுக்கு தொண்டையிலிருது சாதாரணமாக பாடுவதாகவும் ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார். நிச்சயம் அவர் ஒரு பல குரல் மன்னன் . இசை இருக்கும் வரை அவர் புகழ் நிலைத்து இருக்கும் .
Rate this:
25 மே, 2020 - 12:38 Report Abuse
Chandran S திரையுலக சிம்மக்குரலோன் புகழ் வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in