பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
கொரோனா ஊரடங்கால் கடந்த இரு மாதங்களாக சினிமா துறை முடங்கி கிடந்த நிலையில் ஊரடங்கு தளர்வால் இப்போது மெல்ல மெல்ல சினிமா பணிகள் துவங்கி உள்ளன. ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் இரு தினங்களுக்கு முன் சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் பெப்சி சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை பெப்சி அமைப்பினர் முன் வைத்துள்ளனர். அதன் விபரம் சுருக்கமா...
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா துறைக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்த மாநில அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கும் நன்றி. நலவாரியம் மூலமாக ரூ.2000 அளிக்கப்பட்டதற்கும் அரசுக்கு நன்றி. இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். சினிமாவும் ஒரு தொழில் துறை தான். தொழில்துறைக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடன் வசதி, தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை கிடைப்பதில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள் கூட எங்களுக்கு கிடைப்பது இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.
கொரோனாவால் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் சினிமா துறைக்கு எந்த அறிவிப்போ, சலுகைகளோ இல்லை. எங்கள் தமிழ்த் திரைப்படத் துறைக்கு மற்றும் இந்திய திரைப்படத்துறைக்கும், தொழிலாளர்களுக்கும் இந்த நலத்திட்ட உதவிகளில் எங்களை இணைத்து எங்கள் துறையும் மறுபடியும் உயிர்ப்பிப்பதற்கான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெப்சி உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் முக கவசங்கள் வழங்கிய தமிழக பா.ஜ., தலைவர் முருகனுக்கு நன்றி. அதேப்போன்று தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 உறுப்பினர்கள் பணிபுரிய வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. 150 முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடத்தில் 20 தொழிலாளர்களைக் கொண்டு பணிபுரிவது இயலாத காரியம். குறைந்தபட்சம் 60 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கினால் தான் சின்னத்திரை டிவி சீரியல் நடத்த முடியும். தொழிற்சாலைகளுக்கு வழங்கியது போல் 50 சதவீதத் தொழிலாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு பெப்சி தெரிவித்துள்ளது.