முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், இதுவரை ஓய்வில் இருந்த நடிகர், நடிகையர் பலர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமூகவலைதளங்களில் அவர்களின் உடற்பயிற்சி வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன.
அந்த வகையில் நடிகை அஞ்சலியும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி செய்யும் அவரது அருகில் மெத்தை மீது நாய் ஒன்று ஒய்யாராமா படுத்துக்கொண்டு, அஞ்சலி செய்வது போலவே அதுவும் தலையை ஏற்றி இறக்கி உடற்பயிற்சி செய்கிறது.
"என்னுடைய ஒர்க்கவுட் பார்ட்னர் போலோ (நாயின் பெயர்) செய்வதை பாருங்கள். அவர் மிகவும் கண்டிப்பானவர்", என அஞ்சலி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கூடவே #Mylove என ஹேஷ்டேக் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.