விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
தமிழ்சினிமாவில் இனிவரும் நாட்களில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தை சதவிகித அடிப்படைக்கு கொண்டு வரும் விதமாக தற்போது ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமனியனும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும். பல தயாரிப்பாளர்கள் இணைந்து சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். அனைவருக்கும் கொடுக்கப்படும் சம்பளம், தியேட்டர் வருமானம் என அனைத்துமே முறைப்படியும் வெளிப்படையாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் வியாபாரத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.
விஜய்சேதுபதி, சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். இந்தப்படத்தை இயக்க கே.எஸ்.ரவிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் அவர் ரொம்பவே சிக்கனமாக செலவு அதிகம் வைக்காமல் அதேசமயம் விரைவில் படத்தை இயக்குவார் என்பதால் தானாம்... ஆனாலும் இந்த விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமாரின் பெயரை டிக் செய்தது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தான் என திருப்பூர் சுப்பிரமணியமே கூறியுள்ளார். கே.எஸ்.ரவிகுமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தியது ஆர்.பி.சௌத்ரி தான் என்பதும், அவரது தயாரிப்பில் சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.