Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷ்யம்-2வில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் ?

23 மே, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Tamil-actor-to-be-act-in-Drishyam-2

கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடித்திருந்த இந்தப்படம் பின்னர் தமிழில் கமல், கௌதமி ஆகியோர் நடிக்க பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி கண்டது. அதன்பிறகு இன்னும் ஐந்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

த்ரிஷ்யம்- 2 கதை முடியும் இடத்தில் இருந்தே, சில வருடங்கள் கழித்து கதை தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்களாம். அதேசமயம் முதல் பாகத்தில் ஆஷா சரத் நடித்திருந்த வலுவான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் போல இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் இடம்பெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தில் இந்தமுறை பிரபலமான தமிழ் நடிகர் ஒருவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். .

காரணம் தமிழில் பாபநாசம், தம்பி என இரண்டு படங்களை இயக்கி ஓரளவு ரசிகர்களிடம் அறிமுகமாகிவிட்ட இயக்குனர் ஜீத்து ஜோசப், இந்தப்படத்தை மலையாளம், தமிழ் என இரு மொழிப்படமாக இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். அதனால் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களில் ஒருவரை இதில் நடிக்க வைக்கும்போது ஒரிஜினல் தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வும் ஏற்படும், அதுமட்டுமல்ல தமிழிலும் நல்ல வியாபாரம் பார்த்துவிட முடியும் என்று கணக்கு போட்டுள்ளார்களாம். அநேகமாக ஊரடங்கு முடிந்தவுடன் இதுகுறித்த முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
4 உடை மட்டுமே..! நாகினி நடிகையின் பரிதாப நிலை!4 உடை மட்டுமே..! நாகினி நடிகையின் ... கமல் படத்தில் மூன்று நாயகிகள் கமல் படத்தில் மூன்று நாயகிகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in