Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்மகள் வந்தாள்' - ஓடிடி வெளியீட்டிற்கான சோதனை

23 மே, 2020 - 16:09 IST
எழுத்தின் அளவு:
OTT-first-trail-for-tamil-cinema

பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் இருக்கின்றன. இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் இதற்கு முன் தாங்கள் பார்த்து ரசித்த பல படங்களையே பலரும் மீண்டும பார்த்து ரசிக்க ஓடிடி தளங்களைப் பயன்படுத்தினர். இந்த ரசனை வேறு, புதிய படங்களை ரசிக்கும் ரசனை வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

'பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் வெளிவந்த பிறகு அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இல்லை. ஓடிடி தளத்தில் வெளியாகும் தினத்தன்றே இப்படத்தை பலரையும் பார்க்க வைக்க அமேசான் நிறுவனம் பெருமளவில் விளம்பரம் செய்து வருகிறது.

எதிர்காலங்களில் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா வேண்டமா என்பதைத் தீர்மானிக்கும் முதல் சோதனைப் படமாக 'பொன்மகள் வந்தாள்' படம் அமையும்.

டிரைலரை 2 கோடி பேர் பார்த்தார்கள் என்று சொன்னதைப் போல முதல் நாளிலேயே படத்தை 20 கோடி பேர் பார்த்தார்கள் என்று மே 29ம் தேதி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போதுதான் அடுத்தடுத்து நேரடியாக ஓடிடி தளத்திற்கு படங்களை எந்தத் தயக்கமும இல்லாமல் தயாரிப்பாளர்கள் தருவார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்!டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்! காதலில் விழுந்தது எப்படி - ராணா காதலில் விழுந்தது எப்படி - ராணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
25 மே, 2020 - 18:41 Report Abuse
Endrum Indian “பொன்மகள்” “புண்மகள்” என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் அவ்வளவே
Rate this:
ஜோ -  ( Posted via: Dinamalar Android App )
24 மே, 2020 - 10:58 Report Abuse
ஜோ வரவேற்க்க வேண்டியது .... தியேட்டர்கள் பகற்கொள்ளை இனி ஒழியும்
Rate this:
s vinayak - chennai,இந்தியா
23 மே, 2020 - 19:45 Report Abuse
s vinayak சோதனை முடிந்து வெளியிட்ட பிறகு வேதனைதான் வரப்போகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in