Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்!

23 மே, 2020 - 14:32 IST
எழுத்தின் அளவு:
Tenet-new-trailer-put

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள புதிய படம், டெனெட். இத்திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தொடர் காட்சியமைப்பு இல்லாமல் 'நான்லீனியர்' படங்கள் இயக்குவதில் நோலன் ஒரு மேதை. அந்த வரிசையில் இப்படமும் இணையும் என டிரைலர் பார்த்தாலே தெரிகிறது.

2017ல் வெளியான டன்கிரிக் மூன்று ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்படமும் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கலாம். மேலும் சுவாரசியமான விஷயம், டெனெட் படத்தின் சில முக்கிய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது, இந்தி நடிகை டிம்பிள் கபாடியா இப்படத்தில் நடித்துள்ளார். இன்செப்ஷன் படத்தில் கனவை வைத்து கதையமைத்த நோலன், டெனெட் படத்தில் காலத்தை வைத்துக் கதை அமைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பெரிய படங்கள் வெளியாகாமல் உள்ளன. அந்த வரிசையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமான டெனெட் எப்போது வெளியாகும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் முதல் பிரம்மாண்ட படமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை சீராகும் பட்சத்தில் ஜூலை 17ம் தேதி டெனெட் படத்தைத் திரையிட கிறிஸ்டோபர் நோலன் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிடி தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பது தற்போது அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பிருந்தால் பல முக்கிய படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய பட்ஜட் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாவது சரியாக இருந்தாலும், பெரிய பட்ஜட் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்து. இதுவரை இல்லாத வகையில் டெனெட் படத்திற்கு 205 மில்லியன் டாலர் வெலவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ... 'பொன்மகள் வந்தாள்' - ஓடிடி வெளியீட்டிற்கான சோதனை 'பொன்மகள் வந்தாள்' - ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in