Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ மகன் மரணம்

23 மே, 2020 - 13:42 IST
எழுத்தின் அளவு:
Acrtress-Vanisri-son-dead

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. 'கண்ணன் என் காதலன், உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, வாணி ராணி, சிவகாமியின் செல்வன்' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும், நூற்றுக்கணக்கான தெலுங்கு படங்களிலும் நடித்தவர்.

இவரது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக்(36), சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது தந்தையின் இல்லத்தில் இறந்துகிடந்தார். 36 வயதான இவர் டாக்டராக உள்ளார். மாரடைப்பு காரணமாக இவர் இறந்ததாக தகவல்.

அதேசமயம் இவர் தீராத மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இவற்றில் எது உண்மை என தெரியவில்லை.

மறைந்த அபினய வெங்கடேஷ கார்த்திக்கிற்கு நான்கு வயதில் ஒரு மகனும், 8 மாதம் நிறைந்த மகளும் இருக்கின்றனர். இவரின் மனைவியும் டாக்டராக உள்ளார். அபிநய் உடல் சென்னையில் உள்ள வாணிஸ்ரீ இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் 'ஸ்கிரிப்ட் ரைட்டிங்'?தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் ... அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
24 மே, 2020 - 10:43 Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி கலை மகள் கைப்பொருள் உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.... என பாடியவர் தான் பெற்ற மகனை கவனிக்க ஆளில்லாமல் போய் விட்டதே....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 மே, 2020 - 09:52 Report Abuse
Bhaskaran கோடி செல்வங்கள் இருந்தும் அதனை துய்ப்பதற்கு இறைவன் அருள் வேண்டும் .பழைய தெலுங்கு நடிகர் காந்தாராவின்குடும்பத்தினரின் வயிற்றெரிச்சல் இந்த நடிகையின் குடும்பத்தில் விளையாடுகிறதோ என்னமோ
Rate this:
chinnathambi - chennai,இந்தியா
24 மே, 2020 - 08:29 Report Abuse
chinnathambi மறைந்த அபிநய வெங்கடேஷ் கார்த்திக் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். அவரை பிரிந்து வாழும் குடும்படத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24 மே, 2020 - 07:36 Report Abuse
Matt P மரணம் மருத்துவர் என்றும் பார்ப்பதில்லை. ஏழை பணக்காரன் என்றும் பாராமல் எந்த நேரத்திலும் வந்துவிடுகிறது. வேலை பளு காரணமாகவோ ,குடும்பத்தாரின் அவமதிப்பு காரணமாகவோ அல்லது அன்பு குறைவு காரணமாகவோ நண்பர்களின் ஏற்படும் பிணக்கமும் நிம்மதி இழக்க நேரிடுகிறது. சில நேரங்களில் பலருக்கு மந அழுத்தமும் ஏற்படுகிறது. அமைதி தேவைப்படும்போது ,ஒய்வு தேவைப்படும்போது அமைதியாக த்யானத்தில் ஈடுபடலாம். , உழைத்து வேலை செய்வதற்கு கை கால்கள் படைக்கப்பட்டாலும், நம்மை கட்டுப்படுத்தும் கடிவாளம் நம்மிடையே இருக்கிறது. முடிந்த அளவு முயற்சி செய்வோம். வாழ்க்கை வாழ்வதற்கே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in