Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலி கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகள் - திவ்யநாயகிக்காக கோபப்பட்ட ஷெரின்

22 மே, 2020 - 16:21 IST
எழுத்தின் அளவு:
Sherin-angry-statement

மலேசியாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் திவ்யநாயகி சில தினங்களுக்கு முன்னர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதை வைத்து அவரை நெட்டிசன் கடுமையாக கேலி செய்தனர். முகம் தெரியாத பலர், திவ்யநாயகியை கடுமையாக சாடினர். இதனால் மனமுடைந்த திவ்யநாயகி, தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " போலி கணக்குகளில் ஒளிந்துகொண்டிருக்கும் கோழைகள், போலிகள் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக அப்பாவிகளை கேலி செய்து அவர்களது வாழ்வை நாசம் செய்து வருகிறார்கள்.

ஒரு 20 வயது பெண்ணை கடுமையாக கேலி செய்து, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியவர்கள் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். உங்களுடைய இந்த சாதனைக்கு ஒரு பெரிய விருது தான் தர வேண்டும்.

சமூகவலைதளங்களில் நடக்கும் கொடுமையை தடுத்து நிறுத்துங்கள். நீங்கள் கேலி செய்வது உயிரற்ற ஒரு வீடியோவை அல்ல. அதற்கு பின்னால் இருக்கும் ஒரு உயிருள்ள மனிதரை. ஆன்லைன் சமூகத்துக்கு இது ஒரு வெட்கக்கேடான தருணம். '

திவ்யநாயகி தற்கொலை செய்து கொள்ளாமல், போலிகளுக்கு எதிராக போராடி இருக்கலாம். உயிரிழந்த திவ்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்", என நடிகை ஷெரின் கொந்தளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்!200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்! டாப்சி அதிரடி டாப்சி அதிரடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in